கொரோனா பரவல் காரணமாக பல திரைப்படங்களில் படப்பிடிப்பு பாதிப்புக்குள்ளானது. அந்த வகையில், ரிதுன் இயக்கத்தில், தமன் இசையில், யூடியூப் புகழ் ஹரிபாஸ்கர் சிறுவயது கதாநாயகனாக நடித்து வரும் ‘நினைவோ ஒரு பறவை’ படத்தின் படப்பிடிப்பும் பெரிதும் பாதிக்கப்பட்டது.
மனிதர்களின் உயிரை விட படப்பிடிப்பு பெரிதல்ல, என்று கருதிய படக்குழுவினர் படப்பிடிப்பை நிறுத்திவிட்டார்கள். அப்படி இருந்தும் படத்தில் சம்மந்தப்பட்ட சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம், படக்குழுவினரை பெரிதும் பாதிக்க, அந்த பாதிப்பில் இருந்து மீள முடியாமல், படப்பிடிப்பையும் தொடங்கவில்லை.
”மீனா மினிக்கி....” மற்றும் ”இறகி இறகி....” “கனவுல உசுர....” போன்ற பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றாலும், படக்குழுவினர் சிலரை இழந்த துக்கத்தில் இருந்து மீள முடியாமல் படப்பிடிப்பை தொடங்காமல் இருந்த ‘நினைவோ ஒரு பறவை’ படக்குழுவினர், தற்போது துக்கங்களில் இருந்து மீண்டிருப்பதோடு, புதிய உற்சாகத்தோடு 4ம் கட்ட படப்பிடிப்பையும் தொடங்க உள்ளார்கள்.
அதன்படி, டிசம்பர் மாதம் முதல் காரைக்குடியில் ‘நினைவோ ஒரு பறவை’ படத்தின் நான்காம் கட்டப்படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
மைண்ட் டிராமா மற்றும் ஒயிட்டக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படம் 2022 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...