அறிமுக இயக்குநர் சீனிவாச ராவ் இயக்கத்தில் சந்தானம் நடித்திருக்கும் படம் ‘சபாபதி’. இதில் நாயகியாக பிரீத்தி வர்மா நடிக்க, எம்.எஸ்.பாஸ்கர், குக் வித் கோமாளி புகழ், வம்சி, சாயஜி சிண்டே உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஆர்.கே.எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.ரமேஷ் குமார் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு பாஸ்கர் ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். லியோ ஜான் படத்தொகுப்பு செய்துள்ளார்.
வரும் நவம்பர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தை தமிழகம் முழுவதும் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
இந்த நிலையில், நேற்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ‘சபாபதி’ படக்குழுவினர் படம் குறித்து பகிர்ந்துக் கொண்டார்கள்.
பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சந்தானம், “சபாபதி சந்தானத்தின் படம் அல்ல, சபாபதி என்ற கதாப்பாத்திரத்தின் படம். இதில், எங்கேயும் சந்தானம் என்ற ஒரு நடிகர் தெரியவே மாட்டார், சபாபதி என்ற கதாப்பாத்திரம் தான் தெரியும். நான் இதில் திக்கி பேசும் குறைபாடுள்ள நபராக நடித்திருக்கிறேன். அந்த குறைபாடு உள்ளவர்கள் எப்படிப்பட்ட சிரமங்களை சந்திக்கிறார்கள் என்பதோடு, முயற்சித்தால் யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம் உள்ளிட்ட பல நல்ல விஷயங்களை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறோம். இந்த கதையை இயக்குநர் என்னிடம் சொன்ன போது, எனது அப்பா கதாப்பாத்திரத்திற்கான நடிகர் கிடைத்துவிட்டால் நிச்சயம் இந்த படத்தை பண்ணலாம், என்று கூறினேன். அந்த அளவுக்கு அப்பா கதாப்பாத்திரம் சிறப்பாக இருக்கும். அந்த கதாப்பாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கர் சார் மிக சிறப்பாக நடித்துக் கொடுத்திருக்கிறார்.
இயக்குநர் தனது வாழ்க்கையில் பார்த்த கதாப்பாத்திரங்களை தான் படத்தில் வைத்திருக்கிறார். அதனால், எனது ஒவ்வொரு அசைவுகளையும் அவர் சபாபதியை மனதில் வைத்து தான் செய்திருக்கிறார். திக்கி...திக்கி...பேசுவதை கூட மிக நுணுக்கமாக செய்ய வேண்டும், என்று என்னிடம் கூறிய இயக்குநர் அந்த விஷயத்தை கூட மிக நேர்த்தியாக செய்திருக்கிறார். எனக்கு மட்டும் அல்ல, ரசிகர்களும் இது ஒரு வித்தியாசமான நல்ல பொழுதுபோக்கு படமாக இருப்பதோடு, நல்ல மெசஜ் சொல்லும் படமாகவும் இருக்கும்.” என்றார்.
திக்கி...திக்கி...பேசி நடிக்கும் போது சிரமங்கள் இருந்ததா? என்ற நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்த சந்தானம், “நிச்சயமாக இருந்தது. கமல் சார் உள்ளிட்ட பல நடிகர்கள் இதை விட பெரிய விஷயங்களை செய்திருந்தாலும், எனக்கு திக்கி...திக்கி...பேசி நடிப்பது மிகவும் கஷ்ட்டமாக இருந்தது. குறிப்பாக டப்பிங் பேசும் போது ரொம்பவே கஷ்ட்டப்பட்டேன். ஒரு கட்டத்தில் எனக்கு தலைவலியே வந்துவிட்டது. அப்போது தான், கமல் சார் போன்றவர்களை நினைத்து கொண்டேன். அவர்கள் எப்படி எல்லாம் ஒரு கதாப்பாத்திரத்திற்காக கஷ்ட்டப்பட்டிருப்பார்கள் என்று. டப்பிங் முடிந்ததும், மருத்துவமனையில் சிறிது சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகு தான் அந்த தலைவலி சரியானது.” என்றார்.
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...
7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் என்...