வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்ப்பு நடித்திருக்கும் ‘மாநாடு’ படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன் சார்பில் சுரேஷ் காமட்சி தயாரித்துள்ளார். கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்திருக்கிறார். இவர்களுடன் இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், மஹத், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ரிச்சர்டு எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
வரும் நவம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் விழா நேற்று சென்னை கிருஷ்ணவேணி திரையரங்கில் நடைபெற்றது. இதில் திரையுலக பிரபலங்கள் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டதோடு, ஏராளமான சிம்பு ரசிகர்களும் கலந்துக்கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய அனைவரும், சிம்பு பன்முகத்திறன் பற்றி வெகுவாக பாராட்டியதோடு, அவர் தொடர்ந்து படங்கள் நடிக்க வேண்டும், என்று வலியுறுத்தினார்கள். மேலும், சிம்புவை பிடிக்காதவர்கள் கூட அவருடைய திறமையை பாராட்டுவார்கள், என்று கூறியவர்கள், சிம்பு தான் அடுத்த சூப்பர் ஸ்டார், என்றும் கூறினார்கள்.
இறுதியாக பேசிய சிம்பு, ”என் படம் என்றாலே பிரச்சனைகள் வருவது வழக்கமாகிவிட்டது. இந்த மாதிரி சூழல்ல தைரியமா எல்லாத்தையும் எதிர்கொள்கிள்ற ஒரு தயாரிப்பாளர் இருந்தா நல்லா இருக்கும்னு முடிவு பண்ணுனப்ப சுரேஷ் காமாட்சி தான் எனக்கு தெரிஞ்சார். இன்னைக்கு வரைக்கும் இந்தப்படத்தை எல்லா பிரச்சனைகளையும் தாண்டி இங்க கொண்டு வந்துருக்காரு. வெங்கட் பிரபுவும் நானும் சின்ன வயசுல இருந்தே பழகிட்டு வர்றோம்.. என்கிட்ட அவனது அவரோட கதைகளை எல்லாம் சொல்வாரு,ஆனால் வேறொரு ஹீரோவை வச்சு படத்தை பண்ணிட்டு போயிடுவாரு. இப்ப மாநாடு படத்துல ஒன்னு சேர்ந்துட்டோம்.
இது டைம் லூப் கதைன்னாலும் பார்க்குற உங்களுக்கு புரியும்.. ஆனா அதை படமா எடுக்குறத்துக்குள்ளே நாங்க பட்ட கஷ்டங்கள் அதிகம். யுவன் எனக்கு நண்பனா, சகோதரனா, அப்பாவா எல்லாமாக இருக்கார். அவரோட நட்சத்திரம் என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு அந்த அம்சமுள்ள ஒரு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணனும்னு தான் முடிவு பண்ணிருக்கேன். அந்த அளவுக்கு எங்க ரெண்டு பேருக்கும் ஒரே அலைவரிசை தான் இருக்கு.
இந்தப்படம் வெளியானதுக்கு அப்புறம் எஸ்ஜே.சூர்யாவை பிடிக்கவே முடியாது. அந்த அளவுக்கு மனுஷன் பிச்சு உதறி இருக்காரு. நான் விரல்ல வித்தை பண்ணுவேன்னு சொல்வாங்க. ஆனால் என்னோட நடிச்ச ஒய்ஜி மகேந்திரன் சார் விரல்லயே நடிச்சிருக்கார்.. இந்தப்படம் முடியுற வரைக்கும் பிரேம்ஜிகிட்ட அப்பப்ப, பிரேம் ஓவரா நடிக்காதன்னு சொல்லகிட்டே இருந்தேன்..இந்தப்படத்துல சண்டைக்காட்சிகள்ல நடிக்கிற அடிபட்டுச்சு.
என்னை சுற்றி பிரச்சனை பண்ணிக்கிட்டே இருக்காங்க. ஆனா அந்த பிரச்சனையெல்லாம் நான் பார்த்துக்குறேன். என்னை மட்டும் நீங்க பாத்துக்குங்க”, என்று ரசிகர்களை நோக்கி கை காண்பித்த சிம்பு, மேடையில் கண்கலங்க, ரசிகர்கள் பெரும் கூச்சலிட்டு, “நாங்க இருக்கோம்....” என்று கூறியதால், சில நிமிடம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...