அறிமுக இயக்குநர் கதிவேலு இயக்கத்தில் சசிகுமார் நடித்திருக்கும் படம் ‘ராஜவம்சம்’. இதில் நாயகியாக நிக்கி கல்ராணி நடித்திருக்கிறர். இவர்களுடன் ராதா ரவி, தம்பி ராமையா, விஜயகுமார், சதிஷ், மனோபாலா, சிங்கம் புலி, யோகி பாபு உள்ளிட்ட 49 முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநரின் படங்களில் இத்தனை நட்சத்திரங்கள் நடித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
செந்தூர் பிலிம் இண்டர்நேஷ்னல் சார்பில் டி.டி.ராஜா தயாரித்திருக்கும் இப்படத்திற்கு சித்தார்த் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சாம் சி.எஸ் இசையமைக்க, சுரேஷ் கலையை நிர்மாணித்துள்ளார். சபு ஜோசப் படத்தொகுபு செய்திருக்கிறார்.
வரும் நவம்பர் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
படம் குறித்து பேசிய சசிகுமார், “இந்த கூட்டுக்குடும்பம் சம்பந்தப்பட்ட படத்தை கதிர் என்னிடம் கூறினார். மிகவும் பிடித்திருந்தது. நானும் கூட்டு குடும்பத்தில் வாழ்ந்து இருக்கிறேன், வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். இப்படத்தில் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் சித்தார்த் அனைவரையும் அழகாக கேமராவில் காட்டியுள்ளார். எடிட்டர் சாபு ஜோசப் இப்படத்தில் பணிபுரிந்ததில் மகிழ்ச்சி. சாம் சி எஸ் பின்னணி இசை மிகப்பெரிய பலம். இப்படத்திற்கு இன்னொரு மிகப்பெரிய பலம் தயாரிப்பாளர் டி டி ராஜா சார். ரஜினி சார் பேட்ட படத்தில் எனக்கு ஒரு அட்வைஸ் கொடுத்தார். படத்தை தயாரிக்க மட்டும் வேண்டாம் என்றார். எதற்கு சொல்கிறேன் என்றால் அதில் அவ்வளவு சிரமமும் பொறுமையும் திறமை வேண்டும். டி டி ராஜா சாருக்கு நன்றி. முதல் முறையாக நடிகர் சதீஷ் உடன் இணைந்து படத்தில் நடிப்பது மகிழ்ச்சி.” என்றார்.
இயக்குனர் கதிர் பேசுகையில், “படங்களை மக்களுக்கு விரைவில் கொண்டு போய் சேர்க்கும் மீடியா நண்பர்களுக்கு நன்றி. இந்த காலத்தில் உறவுகளையும் உணர்வுகளையும் மறந்து ஓடிக் கொண்டிருக்கிறோம். உறவுகளை ஞாபகப்படுத்தும் படமாக இது இருக்கும், அனைத்து வயது மக்களையும் இப்படம் கவரும். நவம்பர் 26 ஆம் தேதி இப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகிறது.” என்றார்.
தயாரிப்பாளர் டி டி ராஜா பேசுகையில், “தமிழ் சினிமாவில் கூட்டுக்குடும்பம் சம்பந்தப்பட்ட நிறைய வந்துள்ளது. எப்பொழுதும் போல் சண்டை, பிரச்சனை, இறுதியில் ஒன்று சேர்வது போல் இல்லாமல் இப்படம் வித்தியாசமாக இருக்கும். இப்படம் கலகலப்பாக போகும். ஒரு ஜனரஞ்சகமான காமெடி திரைப்படம். எல்லோருக்கும் படம் கண்டிப்பாக பிடிக்கும்.” என்றார்.
நடிகை நிக்கி கல்ராணி பேசுகையில், “ராஜவம்சம் படத்தில் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது .நான் கூட்டுக் குடும்பத்தில் வாழும் வாழ்க்கை கிடைக்கவில்லை. ஆனால் இப்படத்தில் ஒரு பெரிய வீட்டில் உண்மையாகவே ஒரு கூட்டு குடும்பம் போல் வாழ்ந்தது போல் இருக்கிறது. நடிகர் சசிகுமார் நடிப்பின் மூலம் பல அனுபவங்களை கற்றுக் கொடுத்தார். இயக்குனர் கதிர், சுந்தர் சி யின் உதவியாளர். மிக அருமையாக இப்படத்தை இயக்கியுள்ளார் .இப்படத்தை தியேட்டரில் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என கதிர் பிடிவாதமாக இருந்தார். அப்பொழுதுதான் இந்த கூட்டு குடும்பம் சம்பந்தப்பட்ட படத்தை குடும்பம் குடும்பமாக மக்கள் ரசிப்பார்கள் என எண்ணினார். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்.” என்றார்.
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...
7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் என்...