தமிழ் சினிமாவின் முன்னணி திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவர் கே.இ.ஞானவேல் ராஜா. தரமான கதைகள் மற்றும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட கமர்ஷியல் திரைப்படங்களை தயாரித்து தொடர்ந்து பல வெற்றிகளை குவித்தவர், பல புதுமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தி வருகிறார்.
தனது ஸ்டுடியோ க்ரீன் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தொடர்ந்து பல வெற்றி படங்களை தயாரித்தும், விநியோகம் செய்து வரும் கே.இ.ஞானவேல் ராஜா, தற்போது பல திரைப்படங்கள் தயாரித்து வரும் நிலையில், டிஜிட்டல் தளத்தில் நுழைகிறது.
இது குறித்து தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா கூறுகையில், “ஸ்டுடியோ க்ரீன் எப்போதும் புதிய கதைகளை முயற்சிப்பதிலும், திறமையான புது இளைஞர்களுடன் இணைந்து பணியாற்றவுமே விரும்புகிறது. இதுபோன்ற உண்மையான மற்றும் கடின உழைப்பாளிகளுடன் பணிபுரியும் அதிர்ஷ்டம் எங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கு தொடர்ந்து கிடைத்து வருகிறது. டிஜிட்டல் தளம் உலகம் முழுதும், மிகப்பெரிய அளவில் விரிவடைந்து வருவதால், இந்த டிஜிட்டல் உலகத்திற்குள் நாங்களும் ஒரு பயணத்தைத் தொடங்க விரும்பினோம். இந்த நோக்கத்தின் அடிப்படையில், உலகெங்கிலும் உள்ள தமிழ் பேசும் மக்களை தனித்துவமான, பொழுதுபோக்கு மற்றும் நகைச்சுவை மிளிரும் கதைகளுடன் மகிழ்வித்து வரும், ஃபைனலி (FINALLY) போன்ற சூப்பர் லீக் சேனலுடன் கூட்டு சேர்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.
ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனம் யூடியூப் சேனல் ஒன்றுடன் இணைவது இதுவே முதல் முறையாகும். அதன்படி, Studio Green Films நிறுவனம் மற்றும் Finally Pictures Pvt. Ltd எதிர்காலத்தில் இனி டிஜிட்டல் சம்பந்தமான அனைத்து விசயங்களிலும் கூட்டாக செயல்படும், என்று ஃபைனலி யூடியூப் சேனலின் நிறுவனம் மற்றும் இயக்குனர் பாரத் தெரிவித்துள்ளார்.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...