சோனியா அகர்வால், விமலா ராமன், சார்மிளா ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘கிராண்மா’. மலையாளப் படங்களில் நாயகனாக நடித்து வந்த ஹேமந்த் மேனன் வில்லனாக நடித்துள்ள இப்படத்தில் குழந்தை நட்சத்திரம் பெளர்ணமிராஜ் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஜி.எம்.ஏ பிலிம்ஸ் சார்பில் ஜெயராஜ்.ஆர், விநாயகா சுனில் ஆகியோர் தயாரிக்கும் இப்படத்தை ஷிஜின்லால் எஸ்.எஸ் இயக்கியுள்ளார்.
கேரளாவின் மலைப்பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் சர்வதேச தரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தின் மீது படக்குழு வைத்திருக்கும் நம்பிக்கைக்கு பலம் சேர்க்கும் வகையில், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை, சோனியா அகர்வால், விமலாராமன், சார்மிளா, பாவனா மேனன், வரலட்சுமி சரத்குமார், ரம்யா நம்பீசன், இனியா ,சூர்யா ஜே. மேனன், ஆரதி சாஜன், லியானா லிஷாய், தீப்தி சதி, ஷிவதா , மரினா மைக்கேல் , கோகுல்சுரேஷ் , சரத் அப்பானி,ஹேம்நாத் மேனன், அன்சன் பால், மெஹ்பூல் சல்மான், முகமது ரபி என 19 திரைப் பிரபலங்கள் தங்கள் சமூக ஊடகங்களில் இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்டுள்ளனர்.
இதுவரை எந்த ஒரு படத்தின் பர்ஸ்ட் லுக்கிற்கும் கிடைக்காத பெருமையை பெற்றுள்ள இப்படம், தற்போது இந்த நிகழ்வால் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் ஜெயராஜ் கூறுகையில், “முதலில் எங்கள் மீது நம்பிக்கை வைத்து இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை அன்புடன் வெளியிட்டுள்ள திரையுலக பிரபலங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது அன்பு அளவிட முடியாதது. இது எங்களுக்கு கிடைத்த பெரிய வெற்றியாக உணர வைக்கிறது. இந்த நிகழ்வு படத்தைப் பல மடங்கு வெளிச்சத்துக்குக் கொண்டு சென்றுள்ளது. படத்தின் ஆடியோ, டிரைலர் விரைவில் வெளியாக இருக்கின்றன. படத்தை உலக அளவில் திரையரங்குகளில் வெளியிடும் திட்டங்களை விரைவில் அறிவிக்க இருக்கிறோம்.” என்றார்.
படத்தின் இயக்குநர் ஷிஜின்லால் எஸ்.எஸ் பேசுகையில், “முதலில் என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் பட வாய்ப்பை அளித்த என் தயாரிப்பாளருக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை 19 பிரபலங்கள் தங்கள் அன்பையும் ஆதரவையும் காட்டும் வகையில், தங்களது சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளது எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது. இதை எங்களுக்குக் கிடைத்திருக்கும் பெரிய வெற்றியாக நான் உணர்கிறேன். இந்தப் படம் ரசிகர்களுக்கு நிச்சயமாகப் புது அனுபவமாக இருக்கும் என்பதை நான் உறுதியாகக் கூறுவேன். படத்தில் பணியாற்றிய நட்சத்திரங்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருமே தங்களது சிறந்த பங்களிப்பை அளித்துள்ளார்கள். பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு எங்களைப் பெரிதும் ஊக்கப்படுத்தி உள்ள அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.” என்றார்.
'கிராண்மா' கதையிலும் காட்சியமைப்பிலும் மனம் கவரப்பட்ட சோனியா அகர்வால் ,சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...