இந்த ஆண்டின், இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி படங்களின் வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் பாகுபலி படத்திற்கு பிறகு தான் இயக்கும் அடுத்த படம் குறித்து விரைவில் அறிவிக்க உள்ள ராஜமவுலி, தனது குடும்பத்தோடு ஓய்வு எடுக்க பல்வேறு வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, தற்போது இலங்கையில் ஓய்வு எடுத்து வரும் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி, அங்குள்ள தமிழர்களுடன் இணைந்து தனது ஓய்வு நாட்களை கழித்து வருகிறார்.
இலங்கையின் கலே பகுதியில் உள்ள தமிழ் இளைஞர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிய ராஜமவுலி, அந்த இளைஞர்களின் தோலில் கை போட்டு புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராஜமவுலி, இலங்கை தமிழர்களுடன் கிரிக்கெட் விளையாடியது வேடிக்கையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது, என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...