லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் அல்லிராஜா மற்றும் டிவிவி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தானய்யா இணைந்து தயாரிக்கும் படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. (இரத்தம் ரணம் ரௌத்திரம்) இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குநரான எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் இந்த வருடத்தின் இந்திய சினிமாவின் மிக பிரமாண்ட படைப்பாக உருவாகியுள்ள இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
தெலுங்கு சூப்பர் ஸ்டார்களான ஜூனியர் என் டி ஆர் மற்றும் ராம்சரண் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில், பாலிவுட் நாயகி ஆலியா பட், நாயகன் அஜய் தேவ்கன், நடிகர் சமுத்திரகனி உட்பட இந்திய திரைத்துறையின் பல மொழிகளில் இருந்தும் பெரும் நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர்.
இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு தற்போது படத்தின் முன் வெளியீட்டு பணிகள் துவங்கியுள்ள நிலையில், தமிழ் பதிப்பின் மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இதில், இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி, லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தமிழ்குமரன், தயாரிப்பாளர் என்.வி.பிரசாத், டிவிவி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் தானய்யா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய தமிழ்குமரன், “பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி உடன் எங்கள் நிறுவனம் இணைவது எங்களுக்கு பெருமை. உலகளவில் பெரும் எதிர்பார்ப்பிற்குள்ளாகி இருக்கும் பிரமாண்ட படைப்பாக ’ஆர்.ஆர்.ஆர்’ இருக்கிறது. இது நட்பு ரீதியிலான சங்கமம். இன்னும் பல படைப்புகளில் இது தொடருமென நம்புகிறோம்.” என்றார்.
தயாரிப்பாளர் தானய்யா பேசுகையில், “இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இது எங்களுக்கு மிக முக்கியமான படைப்பு. உங்கள் அனைவருக்கும் பிடிக்குமென்று நம்புகிறோம்.” என்றார்.
இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி பேசுகையில், “சில வருடங்களுக்குப் பிறகு உங்களை சந்திப்பது மகிழ்ச்சி. நீண்ட நாட்கள் கழித்து உங்களை சந்திப்பதற்கு மன்னிக்கவும். அடுத்த மாதம் எங்கள் மொத்தப் படக்குழுவினருடன் உங்களை மீண்டும் சந்திப்போம். அதற்கு மிகப்பெரிய அளவில் திட்டமிட்டிருக்கிறோம். அப்போது உங்களது அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கிறோம்.
ஆர்.ஆர்.ஆர் (இரத்தம் ரணம் ரௌத்திரம்) படத்தில் மிகப்பெரிய ஆக்சன் காட்சிகள் நிறைய இருக்கிறது. ஒவ்வொரு ஆக்சன் காட்சிக்கு பின்னும் பெரிய எமோஷன் இருக்கும், அந்த எமோஷன் தான் படத்தின் உயிர்நாடி. அந்த எமோஷனை, ஆத்மாவை வெளிக்காட்டும் ஒரு இசை தான் உங்களுக்கு இன்று அறிமுகப்படுத்தும் உயிரே பாடல். அண்ணன் மரகதமணி அவர்கள் தான் இசையமைத்துள்ளார். அவர் எப்போதும் படத்தின் காட்சிகளுக்கு இசையமைக்க மாட்டார். படத்தின் உயிர் எதைப்பற்றியதோ, படம் என்ன சொல்ல வருகிறதோ அதற்கு தான் இசையமைப்பார். அப்படி RRR (இரத்தம் ரணம் ரௌத்திரம்) படத்தின் மொத்த ஆத்மாவையும் இந்த பாடலில் கொண்டு வந்திருக்கிறார். மதன் கார்கி இந்தப்பாடல் கேட்டபோதே கண்ணீர் சிந்தி ரசித்தார், அருமையான பாடல் வரிகளை தந்திருக்கிறார். இதை இன்னும் உலகிற்கு காட்டவில்லை, உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.” என்றார்.
விஜேந்திர பிரசாத் கதை எழுதியுள்ள இப்படத்திற்கு கார்கி வசனம் எழுதியுள்ளார். எம்.எம்.மரகதமணி ஒளிப்பதிவு செய்ய, கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார்.
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழியைப் போல், வயதுள்ள போதே சம்பாதித்துக்கொள் என்ற அடிப்படையில் நடிகை நயன்தாரா, தற்போது செயல்பட தொடங்கியிருக்கிறார்...
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘நிறங்கள் மூன்று’...
7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் என்...