விஜய் நடிக்கும் அனைத்து தமிழ்ப் படங்களும் டப் செய்யப்படாமலேயே கேரளா மற்றும் ஆந்திராவில் மிகப்பெரிய வெற்றி பெற்றுவருகிறது.
இந்த நிலையில், தெலுங்கு படம் ஒன்றில் வில்லன் வேடத்தில் விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார்.
’ஸ்பைடர்’ பத்திரிகையாளர் சந்திப்பின் போது, விஜய் - மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்க நான் ரெடியாக இருக்கிறேன், என்று முருகதாஸ் கூறியிருந்த நிலையில், டிவி சேனல் ஒன்றுக்கு அவர் பேட்டியளிக்கும் போது, ”விஜய் - மகேஷ் பாபு, அஜித் - மகேஷ் பாபு, விஜய் - அஜித் இதில் எந்த ஜோடியை வைத்து படம் இயக்குவீர்கள்? என்று கேள்வி கேட்க, சற்றும் யோசிக்காமல், விஜய் - மகேஷ் பாபு ஜோடியை வைத்து தான் படம் இயக்குவேன் என்று முருகதாஸ் கூறினார்.
அதுமட்டும் அல்ல, இது குறித்து அவர் விஜயிடமும் பேசிவிட்டாராம். விஜய் - மகேஷ் பாபு கூட்டணியை வைத்து படம் இயக்கினால், தமிழில் விஜய் ஹீரோவாகவும், மகேஷ் பாபு வில்லனாகவும் நடிப்பார்கள் என்றும், தெலுங்கில் மகேஷ் பாபு ஹீரோவாகவும், விஜய் வில்லனாகவும் நடிப்பார்கள், என்று கூறிய முருகதாஸ், இது தொடர்பாக விஜயிடம் பேசிய போது, மகேஷ் பாபு ஹீரோவாக நடித்தால், நான் வில்லனாக நடிக்க ரெடி, என்று விஜய் கூறினாராம்.
அதே சமயம், மகேஷ் பாபு தவிர வேறு யாராவது ஹீரோவாக நடித்தால், தான் வில்லன் வேடத்தில் நடிக்க மாட்டேன், என்ற கண்டிஷனையும் விஜய் போட்டுள்ளாராம்.
விஜயிடம் சம்மதத்தை பெற்றுவிட்ட ஏ.ஆர்.முருகதாஸ், தற்போது விஜய் - மகேஷ் பாபு கூட்டணிக்காக கதை விவாதத்தில் தீவிரம் காட்டி வருகிறாராம்.
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...