சமூக வலைதளங்களில் ரொம்ப ஆக்டிவாக இயங்கும் நடிகை கஸ்தூரி, அவ்வபோது சமூகம் குறித்த தனது கருத்துக்களை நையாண்டியாகவும் தெரிவித்து வருகிறார். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் நடிகை கஸ்தூரி மோதியுள்ளார். இந்த மோதல் இருவருக்கும் இடையிலேனா பேச்சு மோதலாகும்.
வரும் அக்டோபர் 2 ஆம் தேதி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டி நியூஸ் 7 சேனலில் ஒளிபரப்பாக உள்ள பட்டிமன்றத்தில் தான் நடிகை கஸ்தூரியும், சீமானும் தங்களது பேச்சால் மோதிக்கொண்டனர்.
மாணவர்களுக்கு மத்தியில், ”தமிழகத்தின் இன்றைய நிலைக்கு காரணம் தலைவர்களா..? மக்களா..?” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பட்டிமன்றத்தில், நடிகை கஸ்தூரியும், சீமானும் பேசியுள்ளார்கள். இவர்களோடு RJ விஜய், RJ மிருதுளா போன்றவர்களும் பேசியுள்ளார்கள்.
இந்த சிறப்பு பட்டிமன்றம் அக்டோபர் 2-ஆம் தேதி பகல் 1:00மணிக்கும் இதன் மறுஒளிபரப்பாக இரவு 9:00மணிக்கும் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...