தமிழ் சினிமாவில் திடீரென்று வந்து இறங்கிய காமெடி நடிகர்கள் கூட்டத்தில் ஒருவரான இமான் அண்ணாச்சி, பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வருபவர், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார்.
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கி 50 நாட்களுக்கு மேலாகியுள்ள நிலையில், நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளராக இமான் அண்ணாச்சி கருதப்படுவதால் அவர் நிகழ்ச்சி இறுதிவரை நீடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து இமான் அண்ணாச்சி எப்போது வருவார், என்று இயக்குநர் ஹரி எதிர்ப்பார்த்துக் காத்துக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் மட்டும் அல்ல, ’யானை’ படக்குழுவே இமான் அண்ணாச்சிக்காக காத்துக்கொண்டிருக்கிறார்களாம்.
பிக் பாஸ் போட்டியில் பங்கேற்பதற்கு முன்பாக தான் நடித்துக்கொண்டிருந்த படங்களின் பணிகளை முடித்துக்கொடுத்த இமான் அண்ணாச்சி ‘யானை’ படத்தில் ஒரே ஒரு நாள் படப்பிடிப்பு பாக்கியிருந்த நிலையில், அதை முடிக்காமல் பிக் பாஸ் வீட்டுக்கு சென்றுவிட்டாராம்.
அந்த காட்சி படத்தின் மிக முக்கியமான காட்சி என்பதால், இமான் அண்ணாச்சி வந்த பிறகு அந்த காட்சியை படமாக்குவதற்காக இயக்குநர் ஹரி உள்ளிட்ட படக்குழு அவருக்காக கடுப்பாக காத்துக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
அதே சமயம், இமான் அண்ணாச்சி, கொடுத்த தேதியில் அந்த காட்சியை ‘யானை’ படக்குழு படமாக்க தவறியதோடு, அந்த காட்சிக்காக இமான் அண்ணாச்சி கொடுத்த கூடுதல் தேதியிலும் அந்த காட்சியை படமாக்காத நிலையில், அண்ணாச்சியும் தனது அடுத்த வேலையை பார்க்க தொடங்கியதாக, அவர் தரப்பு தெரிவிக்கிறது.
எது எப்படியோ, இமான் அண்ணாச்சிக்காக ‘யானை’ காத்துக்கொண்டிருப்பது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காகியுள்ளது.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...