மட் ரேஸ் எனப்படும் ஆபத்து நிறைந்த மண் சாலைகளில் நடத்தப்படும் கார் பந்தயத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இந்திய சினிமாவின் முதல் படம் என்ற பெருமையை பெற்றிருக்கும் ‘மட்டி’ திரைப்படம் தமிழ்,மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் என ஆறு மொழிகளில் உருவாகியுள்ளது.
பிரேமா கிருஷ்ணதாஸின் பிகே 7 கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் உருவாகியிருக்கும் இப்படத்தை டாக்டர் பிரகபல் இயக்கியுள்ளார்.
இதில் அறிமுக நடிகர் யுவன் கிருஷ்ணா, ரிதன் கிருஷ்ணா, அனுஷா சுரேஷ், அமித் சிவதாஸ் நாயர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கே.ஜி.ரதீஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ‘கே.ஜி.எஃப்’ புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். ‘ராட்சசன்’ புகழ் ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். தமிழ் பதிப்புக்கு ஆர்.பி.பாலா வசனம் எழுதியுள்ளார்.
இப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற டிரைலர் வெளீயீட்டு விழாவில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் திரையிடப்பட்ட படத்தின் டிரைலரை பார்த்த பிரபலங்கள் வியப்படைந்ததோடு, படத்திற்கு சர்வதேச அளவிலான விருதுகள் கிடைப்பது உறுதி, என்றும் வாழ்த்தினார்கள்.
முதல் படத்தை வித்தியாசமான படமாக எடுக்க வேண்டும் என்பதற்காக மண் சாலை கார் பந்த கதைக்களத்தை தேர்வு செய்த இயக்குநர் டாக்டர் பிரகபல் படப்பிடிப்புக்கான இடங்களை தேர்வு செய்தவற்காக சுமார் ஒரு வருடம் எடுத்துக்கொண்டதோடு, நடிகர்களுக்கு இரண்டு வருட காலம் பயிற்சியும் அளித்துள்ளாராம்.
படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு கார் பந்தய காட்சிகளும் சீட் நுணியில் உட்கார வைப்பதோடு, படம் பார்ப்பவர்களை பதற வைக்கும் அளவுக்கு த்ரில்லிங்காகவும் இருப்பதாக படம் பார்த்தவர்கள் புகழ்ந்து வருவதோடு, இந்திய சினிமாவில் இப்படம் புதிய டிரெண்டை உருவாகும் என்றும் பல இயக்குநர்கள் பாராட்டி வருகிறார்கள்.
இப்படி பலரது பாராட்டை பெற்ற ‘மட்டி’ திரைப்படம் நாளை (டிசம்பர் 10) முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...