’பாகுபலி’-யின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் அடுத்த படைப்பாக உருவாகியிருக்கும் படம் ’ஆர்.ஆர்.ஆர்’ (இரத்தம் ரணம் ரெளத்திரம்). தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்துள்ள இப்படத்தில் அஜய் தேவ்கான், ஆலியா பட் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் இந்தி என 5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இப்படத்தின் தமிழ்ப் படதிப்பை இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
இந்த நிலையில், ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. அதிரடியான சாகச சண்டைக்காட்சிகள் நிறைந்திருக்கும் டிரைலரே இப்படி பிரமாண்டமாக இருக்கிறது என்றால், படம் எப்படி இருக்கும், என்ற எதிர்ப்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
மேலும், டிரைலர் வெளியான 24 மணி நேரத்தில் சுமார் 5 கோடிக்கும் மேற்பட்ட ரசிகர்களை கடந்து, அதிகமானோர் பார்த்த இந்திய சினிமா டிரைலர் என்ற சாதனை நிகழ்த்தியுள்ளது.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...