Latest News :

கதாபாத்திரத்திற்காக உடல் நிறத்தை மாற்றிய மு.களஞ்சியம்!
Saturday September-30 2017

‘களவு தொழிற்சாலை’ படத்தில் தான் நடித்த இஸ்லாமிய கதாபாத்திரத்திற்காக பல லட்சம் செலவு செய்து தனது முகம் உள்ளிட்ட உடல் நிறத்தை இயக்குநர் மு.களஞ்சியம் மாற்றிக்கொண்டார். அந்த அளவுக்கு நடிப்பு மீது ஆர்வம் வைத்துள்ள அவர் தொடர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளார்.

 

இது குறித்து கூறிய மு.களஞ்சியம், “எம்.ஜி.கே என்ற பட நிறுவனம் சார்பில் எஸ்.ரவிசங்கர் தயாரிப்பில் டி.கிருஷ்ணகுமார் இயக்கத்தில் தமிழகத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் சிலை கடத்தள்களை மையமாக கொண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘களவு தொழிற்சாலை’ படத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக நடித்துள்ளேன்.

 

படத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் வேலை செய்யும் ‘இர்பான்’ என்கிற இஸ்லாமிய அதிகாரி, இந்து மத கடவுள் சிலைகளை கடத்துவதை உயிரை பணையம் வைத்து தடுத்து நிறுத்துகிறார். மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துகின்ற கேரக்டர். அதில் நடிக்க தடையாக இருந்தது எனது நிறம். எனது நிறத்தை கொஞ்சம் வெளுப்பாக மாற்றி ஓர் இஸ்லாமியர் போல தோற்றத்தை கொண்டு வந்தால் நீங்கள் நடிக்கலாம், முடியுமா ? என்று இயக்குநர் டி.கிருஷ்ணசாமி என்னிடம் கேட்டார். 

 

அதை ஏற்று எனது நிறத்தை மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டேன். சென்னை பிளாஸ்டிக் சர்ஜரி - ன்  (Chennai Plastic  Surgery ) தலைமை மருத்துவர் கார்த்திக் அவர்களை நேரில் சந்தித்து பேசினேன். அவர் மூன்று மாதம் போராடி எனது நிறத்தை மொத்தமாக மாற்றினார். பல லட்சம் ருபாய் செலவானது.

 

நான் இர்பான் கதாப்பாத்திரமாக மாறி இயக்குநர் முன்னால் நின்றேன், இயக்குநர் என்னால் நம்ப முடியவில்லை என அசந்து போனார். எனது ஆர்வத்துக்கும், முயற்சிக்கும் பரிசாக ‘களவு தொழிற்சாலை’ படத்தில்  நடிக்கிற வாய்ப்பை அளித்தார்.

 

ரமலான் மாதத்தில் நோம்பு இருந்தபடியே கடமையாற்றுகின்ற ஒரு நேர்மையான அதிகாரியாக நடித்துள்ளேன், தொடர்ந்து நோம்பில் இருப்பவர்களுக்கு இருகின்ற சோர்வு, அமைதி இதையெல்லாம் துல்லியமாக கணித்து எனது நடிப்பில் வெளிப்படுத்தி உள்ளேன். படத்தை பார்பவர்கள் நீங்களா அது நம்ப முடியவில்லை என்கிறார்கள்.

 

படத்தின் வெற்றியும் எனது கதாப்பாத்திரத்தின் வெற்றியும் எனக்கு பெரும் மகிழ்வை தந்துள்ளது. புதுமுகங்களை வைத்து நான் தயாரித்து இயக்கி முடித்திருக்கிற ‘முந்திரிக்காடு’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. அதன் பிறகு நான் இயக்கி நடிக்க இருக்கும் புதிய படத்திற்கு நம்பிக்கையை களவு தொழிற்சாலையின் இர்பான் கதாப்பாத்திரம் கொடுத்திருக்கிறது.” என்று தெரிவித்தார்.

Related News

792

பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் ‘தருணம்’!
Thursday January-09 2025

அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...

’G2’-இன் அடுத்த அத்தியாயத்தில் இணைந்த நடிகை வாமிகா கபி!
Thursday January-09 2025

வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும்  ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...

ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘கிங்ஸ்டன்’ படத்தின் முதல் பார்வை வெளியானது!
Thursday January-09 2025

தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...

Recent Gallery