லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரமாண்ட திரைப்படமாக உருவாகும் படம் ‘டான்’. சிபி சக்ரவர்த்தி இயக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடிக்கிறார்.
சிவகார்த்திகேயன் - பிரியங்கா அருள்மோகன் ஜோடியாக நடித்த ‘டாக்டர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த ஜோடி இணையும் ‘டான்’ படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, சிவாங்கி, முனிஷ்காந்த், பாலசரவணன், காளி வெங்கட், ஆர்.ஜே.விஜய், இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.
அனிருத் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டுக்காகவும் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கும் நிலையில், படத்தின் முழு படப்பிடிப்பும் சமீபத்தில் நிறைவடைந்தது. இறுதி நாள் படப்பிடிப்பை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...