எதார்த்தமான படங்களுக்கு மட்டுமே சர்வதேச விருதுகள் கிடைக்கும் என்ற பிம்பத்தை மாற்றியமைத்திருக்கிறது ஒரு கமர்ஷியல் காதல் திரைப்படம்.
‘சக்கரை தூக்கலாய் ஒரு புன்னை’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் நாயகனாக அறிமுக நடிகர் ருத்ரா நடித்துள்ளார். நாயகியாக சுபிக்ஷா நடித்துள்ளார்.
கடந்த மாதம் நிறைவடைந்த கோவா சர்வதேச திரைப்பட விழா, சில்வர் ஸ்கிரீன் திரைப்பட விழா, மெக்சிகோ திரைப்பட விழா என பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இப்படம் அனைவரது பாராட்டுக்களை பெற்றதோடு, 8 விருதுகளையும் வென்றுள்ளது.
காதல் கதையை கமர்ஷியலாக சொல்லப்பட்டிருந்தாலும், இப்படத்தில் தொழில்நுட்பம் மிக நுட்பமாக கையாளப்பட்டுள்ளது. குறிப்பாக ஒலி வடிவமைப்பு இப்படத்தின் மிகப்பெரிய ஹைலைட்டாக அமைந்துள்ளது. அதற்கு காரணம், இப்படத்தின் கதைக்களத்தில் ஆடியோகிராபி முக்கிய பங்காற்றுவது தான்.
அதாவது, கதாநாயகன் ஆடியோகிராபியில் தங்கப்பதக்கம் வாங்கியவர். ஆனால், சூழ்நிலை காரணமாக சொந்த ஊரில் வசித்து வருகிறார். சென்னையில், அதே துறையில் பணிபுரியும் நாயகி சுபிக்ஷா டாக்குமெண்டரி படம் எடுப்பதற்காக கதாநாயகனின் உதவியை நாடுகிறார். அதன் பிறகு சந்தித்துக்கொள்ளும் இவர்களுக்கு இடையே முதலில் மோதல் ஏற்பட்டு பிறகு அது காதலில் முடிய, அந்த காதாலால் ஏற்படும் பிரச்சனைகயும், அதையொட்டி நடக்கும் சம்பவங்களையும் இனிக்க இனிக்க சொல்வது தான் ‘சக்கரை தூக்கலாய் ஒரு புன்னை’.
மக்களை கவர்வதற்காகவும், காதல் கதை என்பதாலும் இப்படி ஒரு இனிப்பான தலைப்பை வைத்திருக்கும் படக்குழு, படத்தில் ஹீரோ மற்றும் ஹீரோயின் ஆடியோகிராபி துறையை சார்ந்தவர்கள் என்பதால், ஒலி வடிவமைப்பில் அதிகமாக மெனக்கெட்டிருக்கிறார்கள்.
படத்தின் பெரும்பகுதியை பொள்ளாச்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கியதோடு, பறவைகள் மற்றும் விலங்குகளின் ஒலிகளை ரியலாக பதிவு செய்திருக்கிறார்கள். இதற்காக காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளின் ஒலிகளை பதிவு செய்வதற்காக அடர்ந்த காடுகளில் பயணித்த படக்குழு, சில நேரங்களில் காட்டு யானை உள்ளிட்ட விலங்குகளிடம் இருந்து தப்பித்து ஓடி, அதனால் காயமடைந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது.
காதல் கதையாக இருந்தாலும் கதைக்காக இப்படி கடினமாக உழைத்திருக்கும் இவர்களுக்கு சர்வதேச திரைப்பட விழாக்களில் கிடைத்த அங்கிகாரம் பெரும் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி மகேஷ் பத்மநாபன் இயக்கியிருக்கும் இப்படத்தை நபியா மூவி புரொடக்ஷன்ஸ் சார்பில் நுஃபய்ஸ் ரஹ்மான் தயாரித்துள்ளார். பிஜு விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்ய, ராஜேஷ் அப்புகுட்டன் மற்றும் ருத்ரா இசையமைத்துள்ளார்கள்.
வரும் டிசம்பர் 16 ஆம் தேதி இப்படத்தின் பாடல்கள் வெளியாக உள்ள நிலையில், படம் டிசம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...