அறிமுக இயக்குநர் பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில், சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘ரைட்டர்’.
இனியா, போஸ் வெங்கட், சுப்ரமணியம் சிவா, ஹரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் மற்றும் கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள், பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
பா.இரஞ்சித்திடம் உதவியாளராக பணியாற்றிய பிராங்க்ளின் ஜேக்கப் தனது முதல் படத்தை, தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தமிழ் சமூகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிற படைப்பாக உருவாக்கியுள்ளார் என்பதை நிரூபித்திருக்கிறது சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர்.
சமூகத்தின் எல்லா மட்டத்தினரிடமும் கட்டற்ற அதிகார பலத்துடன் விளங்கும் காவல்துறையின் உள்ளே இருக்கிற அதிகார கட்டுமானத்தின் அடுக்குகளையும், அதன் சொல்லப்படாத பக்கங்களையும் விவிரிக்கும் விதமாக உருவாகி இருக்கும் இத்திரைப்படம் வருகிற டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாகிறது.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...