தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வந்த பூமிகா சாவ்லா, குணச்சித்திர வேடங்களிலும் பல படங்களில் நடித்து வருபவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கியுள்ளார்.
கடைசியாக நயன் தாரா நடித்த ‘கொலையுதிர் காலம்’ படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்திருந்தவர், தற்போது உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கும் ‘கண்ணை நம்பாதே’ படத்தில் வித்தியாசமான பரிமாணத்தில் தோன்ற இருக்கிறார். கதையை முன்னோக்கி நகர்த்தி செல்லும் மிக முக்கியமான மையக் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் பூமிகா, இனி தொடர்ந்து பல வித்தியாசமான வேடங்களில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், சாதாரண கதாபாத்திரங்களில் நடிப்பதில் தனக்கு அலுப்பு ஏற்பட்டு விட்டதாகவும், அதனால் தான் ‘கொலையுதிர் காலம்’ படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்தேன். இனி தொடர்ந்து அதுபோன்ற வித்தியாசமான வேடங்களில் பல தமிழ்ப் படங்களில் நடிப்பேன், என்று கூறியவர் எதிர்மறை வேடங்களில் நடிக்க தனக்கு எந்தவித தயக்கமும் இல்லை, என்று தெரிவித்துள்ளார்.
கோபிசந்தின் ’சீட்டிமார்’ மற்றும் விஸாக் சென்னின் ’பாகல்’ ஆகிய இரண்டு மெகா ஹிட் தெலுங்குப் படங்களில் நடித்திருந்த பூமிகா சாவ்லா, தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நடிக்க முடிவு செய்துள்ளார்.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...