ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான ‘இந்தியன்’ மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், மீண்டும் கமல் - ஷங்கர் கூட்டணி ‘ரோபோ’ என்ற படத்தில் இணைவதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அப்படம் கைவிடப்பட்ட நிலையில், கமலுக்காக ஷங்கர் எழுதிய கதையை சிறிது மாற்றி ரஜினியை வைத்து ‘எந்திரன்’ படதை இயக்கினார்.
இதற்கிடையே, ’இந்தியன்’ இரண்டாம் பாகத்தை ஷங்கர் இயக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியான நிலையில், அத்தகவல் குறித்து ஷங்கர் அதிகாரப்பூர்வமாக எதும் சொல்லவில்லை.
இந்த நிலையில், ஷங்கர் - கமல் கூட்டணியில் ’இந்தியன் 2’ உருவாவது உறுதியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் இன்று நடைபெறும் பிக் பாஸ் 100 வது நாள் விழாவில் தெரிவிக்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் ஷங்கர் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்வதோடு, ‘இந்தியன் 2’ படம் குறித்து பேச இருக்கிறார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...