இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடித்த ‘100’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதை தொடர்ந்து இவ்விருவரும் மீண்டும் கைகோர்த்துள்ளனர். இவர்களது கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், படத்தின் தலைப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
படத்திற்கு ‘டிரிக்கர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சுண்டி இழுக்கப்படும் விசை, உந்தி தள்ளுதல் என பொருள்படும். அதாவது, தூண்டல் என்று சொல்லலாம். டிரிக்கர் அனைவரது வாழ்விலும் இன்றியமையாத விளைவுகள் தரும் ஒரு அம்சமாக இருக்கிறது. இந்த தூண்டல் ஒரு நல்ல விசயத்திற்காக நடைபெறும்போது, அது ஒரு சமூகத்தில் அனைவரது வாழ்வுக்கும் நன்மை உண்டாக்குகிறது. இந்த உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் திரைப்படைப்பாக தான் இப்படம் உருவாகி வருகிறது.
தூண்டல் எனும் கருவின் அடிப்படையில் ஒரு அருமையான திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சாம் ஆண்டன். ஒவ்வொரு திரைப்படத்திலும், நாயகன் அதர்வா முரளி திரைத்துறையில் ஒவ்வொரு படியாக தன் நட்சத்திர அந்தஸ்தில் உயர்ந்து வருகிறார். இத்திரைப்படம் அவரை அடுத்த தளத்திற்கு உயர்த்துவதாக அமையும். விநியோக வட்டாரத்தில் அவர், எப்போதும் லாபம் தரும், ஜெயிக்கும் குதிரையாக கொண்டாடப்படுகிறார். இன்னொருபுறம் இயக்குநர் சாம் ஆண்டன் வித்தியாசமான களத்தில், கமர்ஷியல் அம்சங்களுடன், புதிதான கதை அமைப்பில், அனைவரையும் ஈர்க்கக்கூடிய தரமான வெற்றிப்படங்களை தந்து, பாராட்டுக்களை குவித்து வருகிறார். இவர்கள் கூட்டணியில் “டிரிக்கர்” திரைப்படம் முழுக்க முழுக்க கமர்ஷியல் ஆக்சன் திரைப்படமாக, அதர்வா முரளியை மொழி தாண்டி அனைத்து ரசிகர்களும் ரசிக்கும்படியான படைப்பாக உருவாகிறது.
பிரமோத் பிலிம்ஸ் பிரதீக் சக்ரவர்த்தி மற்றும் சுருதி நல்லப்பா, பல மொழிகளில் அழகான திரைப்படங்களை வழங்கி வருகின்றனர். இவர்களது 25 வது திரைப்படமாக ‘டிரிக்கர்’ உருவாகி வருகிறது.
இப்படத்தில் அத்ரவாவுக்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். இவர்களுடன் அருண் பாண்டியன், சீதா, கிருஷ்ண குமார், வினோதினி வைத்தியநாதன், முனிஷ்காந்த், சின்னி ஜெயந்த், அறந்தாங்கி நிஷா, அன்புதாசன் மற்றும் இன்னும் பல முக்கிய நடசத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர்.
ஜிப்ரான் இசையமைக்க, கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். திலீப் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, ராஜேஷ் கலை இயக்கம் செய்கிறார்.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...