நபீஹா மூவீஸ் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் நுபாயஸ் ரகுமான் தயாரித்துள்ள படத்திற்கு கவித்துவமாக ‘சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை’ என்று பெயர் வைத்துள்ளனர். நடிகர் ருத்ரா நடிப்பில் மகேஷ் பத்மநாபன் இயக்கியுள்ள இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. படக்குழு உள்பட விழாவில் பல்வேறு திரை பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது, ”இப்படத்தின் நாயகன் ருத்ராவின் தந்தையை வாழ்த்தி வரவேற்கிறேன். நான் இந்தப் பதினைந்து நாட்களில் மூன்று வித்தியாசமான படங்களின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டேன். சிறு படங்கள் வெற்றி பெறணும் என்பதற்காக ஆத்மார்த்தமான மனதோடு வாழ்த்த வர்றோம். நாங்க கஷ்டப்பட்டதெல்லாம் வேற. நான் கஷ்டப்பட்டது எல்லாமே சினிமா நல்லாருக்கணும் என்று தான். வ.உ.சிக்கு சிலை வைத்தது முதல் அவருடைய புத்தகங்களை நூலகத்தில் வைப்பது வரை தமிழக முதல்வர் ஸ்டாலின் அற்புதமான விசயங்களை செய்திருக்கிறார். இந்தப்படம் வெற்றி பெற்று அசல் தேறினாலே போதும். தயாரிப்பாளர் ரகுமான் அண்ணன் உடனே ரெண்டு படத்தை அறிவிச்சுடுவார். 50 கோடி 100 கோடி வாங்குற ஹீரோக்களை கேட்கிறேன். நீங்க வாங்குற காசு எல்லாம் சினிமாவுக்கு வந்திருக்குதா. உங்களால இந்த தமிழ்நாட்டுக்கு என்ன பயன்? ஏழை ரசிகர்கள் தர்ற பணம் தான் உங்களை கோடிஸ்வரர்கள் ஆக்குகிறது. இங்கே ஒரு தமிழ்நடிகை அழகாக சேலை கட்டி வந்திருக்கிறார். இதே ஒரு நார்த் பொண்ணு என்றால் எப்படி வருவார்கள்? நம் படங்களில் தமிழ் பெண்களையே நடிக்க வையுங்கள். நாம் எல்லாரையும் சிரிக்க வைக்க வேண்டும். சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை இலக்கிய நயமிக்க ஒரு டைட்டில். நடிகர் ருத்ரா மலையாளி தான். ஆனால் துணிச்சலாக தமிழ் படம் எடுத்திருக்கிறார். உலகத்தொழில் அமைப்புகளை எல்லாம் நம் தமிழக முதல்வர் இங்கு அழைத்து வருவதைப் போல மற்றவர்கள் படம் எடுக்க வருவதற்கான அனுமதி பிரச்சனைகளையும் சரி செய்ய வேண்டும். சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை பெரிய வெற்றிபெற வேண்டும்.” என்றார்.
இயக்குநர் ஆர்.வி உதயகுமார் பேசியதாவது, ”இந்தப்படத்தின் தலைப்பை யார் வைத்தார்கள் என்று தெரியாது. மிக அருமையான தலைப்பு. இன்று சினிமாவில் கன்டென்ட் தான் ட்ரெண்ட். பெரிய ஹீரோ படமாக இருந்தாலும் படத்தில் என்ன விசயம் இருக்கு என்பதை தான் ரசிகன் பார்க்கிறான். நல்ல கதையை அழகாச் சொன்னா போதும். அது ஜனங்களுக்குப் பிடிச்சிதுன்னா ஹீரோ பெரியாள். விமர்சனங்களைப் பற்றி கவலையே படக்கூடாது. ப்ளுசட்டை மாறன் படத்தை நான் இன்னும் பார்க்கல. அவர் நிறைய படத்தை கழுவி கழுவி ஊத்திருக்கிறார். இப்ப அவர் படத்தை வேறு யாரோ விமர்சிக்கிறாங்க. ஆனா நாம யாரையும் விமர்சிக்கக்கூடாது. நாம கிரியேட்டர்ஸ். படைப்புகள் தோற்றாலும் படைப்பாளிகள் தோற்க மாட்டார்கள். வெளிவரும் முன்பே இப்படம் ஏழெட்டு விருதுகள் வாங்கியிருக்கிறதென்றால் அது மிகப்பெரிய விசயம் அல்லவா? இந்தப்படம் மீண்டும் மீண்டும் விருது பெறட்டும். பெரிய வெற்றிப்பெறட்டும்” என்றார்.
படத்தின் கதாநாயகன் ருத்ரா பேசியதாவது, “அனைவருக்கும் வணக்கம். முதலில் என் அம்மா அப்பா டீச்சர்ஸ், இப்படியொரு நல்ல சந்தப்பர்த்தைக் கொடுத்த கடவுள் எல்லாருக்கும் நன்றி. என்னோட அம்மா ரொம்ப ஆசைப்பட்டார் நான் நடிகன் ஆகணும்னு. இப்ப என் அம்மா இல்லை. மிஸ் யூ அம்மா. சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை இதுவந்து எனது இரண்டாவது திரைப்படம். இந்தப் பிஸி செட்டியூலிலும் இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அனைவருக்கும் நன்றி. ஒரு படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மீடியாதான். மீடியா நண்பர்களுக்கு நன்றி. இன்றைய ஹீரோ மியூசிக் டைரக்டர். படத்தில் மூன்று பாட்டு பண்ணிருக்கார். அவர் எனக்குச் சகோதரர். பாடலாசிரியர் கட்டளை ஜெயா அவர்கள், கொரியாகிராபர் இவர்கள் எல்லாரின் டெடிகேசனும் ரொம்ப முக்கியம். இந்தப்படத்தை திரைக்கு கொண்டு வருவதற்கு ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கோம். லொக்கேசன்கள் எல்லாமே காடுதான். காட்டு மிருகங்கள் உள்ள இடங்கள் தான். வண்டிபோக வசதி கிடையாது. ரொம்ப கஷ்டப்பட்டோம். படத்தில் பங்குபெற்ற எல்லாருக்கும் மிக்க நன்றி” என்றார்.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...