இயக்குநர் பா.இரஞ்சித் தான் இயக்கும் படங்களில் புரட்சிகரமான கருத்துக்களை பதிவு செய்வதோடு, தான் தயாரிக்கும் படங்கள் மூலமாக திரையுலகில் மட்டும் இன்றி சமூகத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில், அவருடைய நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில், நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ரைட்டர்’ திரைப்படமும் தமிழ் சினிமாவிலும், சமூகத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்ப்பார்ப்பை அனைவருடைய மனதிலும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம், சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலரில் காவல் நிலையத்தில் ரைட்டர்களின் வலியை அழுத்தமாக இயக்குநர் பதிவு செய்திருப்பதை காண முடிந்தது.
”போலீஸ் பத்தி அவதூறு பரப்பவே ஒரு கூட்டம் இருக்கு...”, “காக்கிகளின் சாம்ராஜ்யத்தில் தமிழகம்; மலிந்துக்கிடக்கும் மனித உரிமை...” உள்ளிட்ட பல
வசனங்கள் தற்கால வாழ்வியலில் நடக்கும் ஒரு வலியை வெளிக்கொண்டுவரும் படமாக ’ரைட்டர்’ இருக்கும் என்று தோன்றுகிறது.
அறிமுக இயக்குநர் பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கியிருக்கும் இப்படத்தில், ரைட்டர் வேடத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வர, படம் கிறிஸ்துமஸ் வெளியீடாக வரும் டிசம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...