அஜித்தின் சினிமா பயணத்தில் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக கருதப்படும் ‘சிட்டிசன்’ படத்தை இயக்கிய சரவணா சுப்பையா, எழுதி இயக்கியிருக்கும் படம் ‘மீண்டும்’. ஹீரொ சினிமாஸ் சார்பில் சி.மணிகண்டன் தயாரித்திருக்கும் இப்படத்தில் கதிரவன் நாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியான அனகா நடித்திருக்கிறார். இவர்களுடன் பிரணவ் ராயன், அனுராதா, துரை சுதாகர், சுபா பாண்டியன், அபிதா செட்டி, யார் கண்ணன், எஸ்.எஸ்.ஸ்டான்லி, சுப்பிரமணிய சிவா, தர்ஷினி, இந்துமதி, மணிகண்டன், கேபிள் சங்கர், ஆதர்ஷ், மோனிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
இரண்டு தந்தை, ஒரு பெண், ஒரு குழந்தை என்ற மாறுபட்ட கதையம்சமுள்ள இப்படத்தில் கடற்படையினரிடம் சிக்கி தமிழ் மீனவர்கள் படும் சித்ரவதையை தத்ரூபமாக்கி படமாக்கி உள்ளனர். இந்தியா மீது மறைமுக தாக்குதல் நடத்தும் இலங்கை, சீனா பாகிஸ்தான் போன்ற நாடுகளின் விஞ்ஞான ரீதியானதாக்குதலையும் இப்படத்தில் சொல்லியிருக்கின்றனர்.
கதாநாயகன் கதிரவன் இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளில் உயிரை பணயம் வைத்து நடித்திருப்பதோடு, ஆறு நாட்கள் நிர்வாணமாக சித்ரவதை செய்யப்படும் காட்சிகளில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நரேன் பாலகுமாரன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார். சீனிவாசன் தேவாம்சம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜா முகமது படத்தொகுப்பு செய்திருக்கிறார். சூப்பர் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, மணிமொழியான் ராமதுரை கலையை நிர்மாணித்துள்ளார்.
வரும் டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் லியோனி, நாஞ்சி சம்பத், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகர் ரவிமரியா உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் சரவணா சுப்பையா, “இந்த இடத்துக்கு என்னை அழைத்து வந்த தயாரிப்பாளர் மணிகண்டனுக்கு நன்றி. அவர் இல்லாவிட்டால் இப்படியொரு வாழ்க்கை கிடைத்திருக்காது. மிகப்பெரிய அர்ப்பணிப்பை நடிப்பில் அவர் கொடுத்திருக்கிறார். எனது இரண்டு கண்களாக ஒளிப்பதிவாளர் மற்றும் இசைப்பாளர் அவ்வளவு உழைப்பு கொடுத்திருக்கிறார்கள். பின்னணி இசை ஆங்கில பட பாணியில் இருந்தாலும் முழுக்க முழுக்க இந்திய இசை தான் அமைத்திருக்கிறார். இந்த படம் வெளியிட பல இடத்தில் பேசி பார்த்தோம் கைகொடுக்க வில்லை. இக்கட்டான இந்த சூழலில் தான் பிடி செல்வகுமார் கைகொடுத்தார். அவர் இல்லாவிட்டால் இந்த படம் வருமா என்பது தெரியாது. இந்த படத்தில் அற்புதமான பாடல் வரிகளை வைரமுத்து எழுதி என்னை ஊக்குவித்தார். முக்கியமாக ஒத்துழைப்பு கொடுத்த டைமண்ட் பாபு அதேபோல் இடையில் ஒரு நிகச்சிக்கு எற்படு செய்துகொடுத்த விஜய முரளி கெஸ்ட் அப்பியரன்ஸ் வந்து போனார் அவருக்கும் எனது நன்றி. ஆனால் டைமண்ட் பாபுவோட உதவி அளப்பரியது. அவருடன் பிடி செல்வகுமார் அசோசியேட் செய்து சிறப்பான விழாவாக இதை மாற்றிவிட்டார்கள். இந்த படத்தை பார்த்து என்னை கைதூக்கி விடுங்கள், வெற்றி பெற்றால் மிக நல்ல படங்களை தொடர்ந்து தருவேன்.” என்றார்.
ஹீரோ கதிரவன் பேசுகையில், “மீண்டும் படத்துக்காகவும் எனது கம்பெனிக்காகவும் நேரம் ஒதுக்கி இங்கு வந்த அனைவருக்கும் எனது நன்றி. திண்டுக்கல் லியோனி, நாஞ்சில் சம்பத், ரங்கராஜ் பாண்டே, இயக்குநர் எஸ் ஏ சி சார் இவர்கள் எல்லாம் இங்கு வந்தது எனக்கு பெருமையாக இருக்கிறது. இவர்கள் எல்லோருக்கும் நான் ரசிகன் ஒரு ரசிகன் விழாவுக்கு நீங்கள் எல்லோரும் வாழ்த்த வந்திருக்கிறீர்கள். அது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.” என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய சிறப்பு விருந்தினர்கள், ‘மீண்டும்’ திரைப்படத்தின் டிரைலரை வெகுவாக பாராட்டியதோடு, இயக்குநர் சரவணா சுப்பையா மிக திறமையான இயக்குநர். ‘சிட்டிசன்’ படத்தின் மூலம் அஜித்தை மிகப்பெரிய உயரத்திற்கு கொண்டு சென்றவர், தற்போது இயக்கியிருக்கும் ‘மீண்டும்’ திரைப்படம் சர்வதேச பிரச்சனையை பேசும் படம் என்பது தெரிகிறது. நிச்சயம் இந்த படம் வெற்றி பெறுவதோடு, இந்திய சினிமாவின் மிக முக்கியமான திரைப்படமாக இருப்பதோடு, நாயகன் கதிரவனுக்கு தமிழ் சினிமாவில் நல்ல இடத்தை பெற்றுக் கொடுக்கும், என்று பேசினார்கள்.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...