’பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘சர்தார்’ ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருந்த கார்த்தி, இயக்குநர் முத்தையா இயக்கத்தில் ‘விருமன்’ படத்திலும் நடிக்க தொடங்கினார். கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய அப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துவிட்டது.
மதுரை, தேனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 60 நாட்களாக நடைபெற்று வந்த ‘விருமன்’ படத்தின் முழு படப்பிடிப்பும் டிசம்பர் 21 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.
இந்த நிலையில், ‘விருமன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது குறித்து கூறிய நடிகர் கார்த்தி, “நீண்ட நாட்களுக்கு பின் மதுரை மக்களை பார்த்து சந்தோஷமடைகிறேன் . மதுரை சுற்று வட்டாரத்தில் நல்ல திறமையுடன், சிறப்பான திட்டமிடலால், மொத்தமாக 60 நாள்கள் படபிடிப்பை நடத்தி உள்ளார்கள் இயக்குநர் முத்தையாவும். ஒளிப்பதிவாளர் செல்வகுமாரும். என்னுடன் ஜோடியாக நடித்த அதிதி ஷங்கருக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. எதார்த்தமானவர், அவருடன் நடித்த நாட்கள் ஜாலியானவை. மீண்டும் இப்படம் மூலம் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைவதில் சந்தோஷம். 2டி நிறுவனத்திற்கும் தயாரிப்பாளர் சூர்யா அவர்களுக்கும் நன்றி.” என்றார்.
பொதுவாக இயக்குநர் முத்தையாவின் படங்களில் பெண் கதாப்பாத்திரங்கள் அழுத்தமிக்க வீரம் கொண்ட கதாப்பாத்திரமாக இருக்கும். அதேபோல், இந்த படத்திலும் நாயகி கதாப்பாத்திரம் வலுவான கதாப்பாத்திரமாக இருக்க, அந்த வேடத்தை நாயகி அதிதி மிக சிறப்பாக கையாண்டிருப்பதாகவும், முதல் படத்தில் எதிர்ப்பார்த்ததை விட அவர் மிக சிறப்பாக நடித்திருப்பதாகவும் படக்குழுவினர் பாராட்டி வருகிறார்கள்.
ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், கருணாஸ், சூரி, வடிவுக்கரசி, சிங்கம்புலி, மனோஜ் பாரதிராஜா, ராஜ்குமார், இந்துமதி, வசுமித்ரா, நந்தினி, ஹலோ கந்தசாமி, வேல்முருகன், டி.எஸ்.ஆர், ஓ.ஏ.கே.சுந்தர், ரிஷி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் கிராமத்து பின்னணியில், உறவுகளின் கதையை சொல்லும் குடும்ப படமாக உருவாகியுள்ளது.
படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகளில் ஈடுபட்டுள்ள படக்குழு, விரைவில் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு குறித்து அறிவிக்க உள்ளது.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...