Latest News :

காக்கி உடை அணியும் பரத்!
Saturday September-30 2017

பரத் முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கும் படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் எளிமையாக நடைபெற்றது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீசெந்தில் இயக்குகிறார். இவர் நாளை இயக்குநர் போட்டியில் இறுதிப்போட்டி வரை முன்னேறியவர். இவரது சக போட்டியாளர்கள் தான் ‘ரெமோ’ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் மற்றும் ‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கிய நித்திலன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்‌ஷன்ஸ், தீனா ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்க, சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்கிறார்.

 

படம் குறித்து இயக்குநர் ஸ்ரீசெந்தில் கூறுகையில், “சஸ்பென்ஸ் திரில்லராக இப்படம் உருவாகியிருக்கிறது. இதில் பரத் முதன் முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். அவருடன் கண்ணதாசனின் பேரனான ஆதவ் கண்ணதாசன் மற்றும் சுரேஷ் மேனன் ஆகியோரும் கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். நாயகி கேரக்டரில் நடிப்பதற்காக முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இறுதியானவுடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கிறோம். இப்படத்தின் படபிடிப்பு விஜயதசமியான இன்று முதல் தொடங்குகிறது.” என்றார்.

 

இப்பட்த்தின் தலைப்பு மற்றும் பஸ் லுக் போஸ்டரை தீபாவளியன்று வெளியிட திட்டமிட்டிருப்பதாக, படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான எம்.எஸ்.சிவநேசன் கூறினார்.

Related News

795

பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் ‘தருணம்’!
Thursday January-09 2025

அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...

’G2’-இன் அடுத்த அத்தியாயத்தில் இணைந்த நடிகை வாமிகா கபி!
Thursday January-09 2025

வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும்  ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...

ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘கிங்ஸ்டன்’ படத்தின் முதல் பார்வை வெளியானது!
Thursday January-09 2025

தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான 'இசை அசுரன்' ஜீ...

Recent Gallery