Latest News :

பா.இரஞ்சித்திரன் அரசியலை ஏற்றுக்கொண்ட பாரதிராஜா! - ‘ரைட்டர்’ படம் பார்த்து பாராட்டு
Thursday December-23 2021

தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி இந்திய சினிமாவின் கவனம் ஈர்த்த ஒரு சில இயக்குநர்களில் ஒருவரான பா.இரஞ்சித் இயக்கும் படங்களிலும், தயாரிக்கும் படங்களிலும அரசியல் இல்லாமல் இருக்காது. குறிப்பாக சமூக அரசியலை தனது படங்களில் பேசி வரும் இயக்குநர் பா.இரஞ்சித், தனது அரசியலை ஏற்றுக்கொள்பவர்ளுடன் தான் பயணித்து வருவதாகவும், தனது படங்களில் நடிப்பவர்களுக்கு அவர்கள் மட்டுமே வாய்ப்பு தருவதாகவும் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார்.

 

மேலும், இயக்குநர் வெற்றிமாறன், நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி, இயக்குநர் சுப்பிரமணிய சிவா போன்றவர்கள் தான் பேசும் அரசியலை ஏற்றுக்கொண்டதால் தான் தன்னுடன் பயணிப்பதாகவும் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார்.

 

இந்த நிலையில், இயக்குநர் பா.இரஞ்சித்தின் அரசியலை இயக்குநர் பாரதிராஜாவும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். ஆம், பா.இரஞ்சித் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிராங்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ரைட்டர்’ படத்தை பார்த்த பாரதிராஜா படத்தை வெகுவாக பாராட்டியதோடு, தரமான படங்களையும், கலைஞர்களையும் உருவாக்கும் இயக்குநர் பா.இரஞ்சித்துக்கு வாழ்த்துகள், என்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இயக்குநர் பாரதிராஜாவும், பா.இரஞ்சித்தின் அரசியலை ஏற்றுக்கொண்டார். 

 

இது குறித்து பாரதிராஜா கூறுகையில், “தமிழ் சினிமாவில் இப்படி ஒரு போலீஸ் கதை புதுமையாக இருக்கிறது. எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது. இளைய தலைமுறையினரிடமிருந்து இப்படிப்பட்ட படங்கள் வருவதை பார்க்கும் பொழுது தமிழ் சினிமா இன்னும் வளமானதாக மாறுகிறது.

 

எப்போதும் அதிகமாக பேசி நடிக்கும் சமுத்திரக்கனி இந்தபடத்தில் அதிகம் பேசாமல் மிக அழகாக நடித்திருக்கிறார். நான் ரசித்தேன்.

 

 

இயக்குநர் பா.இரஞ்சித் தரமான படங்கள் தயாரிப்பதன் மூலம் நல்ல இயக்குனர்களை இந்த தமிழ்சினிமாவுக்கு தந்துகொண்டிருக்கிறார் அவருக்கும் எனது வாழ்த்துக்கள்.” என்றார்.

 

Bharathiraja watch Writer

 

ஏற்கனவே இயக்குநர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான அதே சமயம் மாபெரு வெற்றி படமாக ‘ரைட்டர்’ இருக்கும் என்று பாராட்டியுள்ளார். அதேபோல் சிறப்பு திரையிடலி படம் பார்த்த பிரபலங்கள் அனைவரும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

 

படத்தின் டிரைலர் மூலம் ரசிகர்களிடமும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ரைட்டர்’ திரைப்படம் நாளை (டிசம்பர் 24) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Related News

7952

சோனியா அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள ஹாரார் திரில்லர் ’7G’ ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது!
Tuesday June-25 2024

ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் சார்பில், இயக்குநர் ஹாருன் தயாரித்து, எழுதி,  இயக்க, சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பில், மாறுபட்ட மிரட்டலான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள 7G திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது...

அதர்வா-நிமிஷா சஜயன் நடிக்கும் ’டிஎன்ஏ’ படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது!
Tuesday June-25 2024

ஒலிம்பியா மூவீஸ், மக்களை மகிழ்விக்கும் வகையிலான பல பொழுதுபோக்கு திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது...

’கல்கி 2898 கி.பி’ படத்தின் க்ரோனிக்கிள்ஸ் வீடியோ வெளியானது!
Tuesday June-25 2024

சமீபத்தில் வெளியான டிரெய்லரைத் தொடர்ந்து எட்டுதிக்கும் ’கல்கி 2898 கிபி’ படத்தின் பேச்சாகவே இருக்கிறது...