சினிமா தொழிலை நம்பியிருக்கும் பல்லாயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதரத்திற்கு சிறு பட்ஜெட் மற்றும் அறிமுக நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்ளின் படங்கள் தான் உறுதுணையாக இருக்கிறது. ஆனால், இதுபோன்ற சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் படங்களுக்கு அப்படத்தில் நடிக்கும் சில நடிகர், நடிகைகள் சரியான ஒத்துழைப்பு கொடுக்காததால், அவர்கள் மீண்டும் திரைப்பட தயாரிப்பில் ஈடுபடமால் போக, சினிமா தொழிலாளர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.
குறிப்பாக சில நடிகைகள் தான் நடிக்கும் திரைப்படங்களின் விளம்பரங்களின் பங்கேற்காமல் இருந்து வருகிறார்கள். இதற்கு சில மூத்த தயாரிப்பாளர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், அந்த நடிகைகளின் அலட்சியப் போக்கும் தொடர்ந்துக்கொண்டே தான் இருக்கிறது.
அட, நயன்தாரா போன்ற நடிகைகள் தான் இப்படி படங்களின் விளம்பர பணிகளில் ஈடுபடாமல் வந்தார்கள் என்றால், தற்போது அட்ரஸ் இல்லாத நடிகைகள் கூட, படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் டிமிக்கி கொடுத்து வர தொடங்கியிருப்பது தான் பெரும் வேதனையாக இருக்கிறது.
இந்த நிலையில், மலையாள சினிமாவில் சில படங்களில் நாயகனாக நடித்திருக்கும் ருத்ரா, ‘சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்.
பீஹா மூவீஸ் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் நுபாயஸ் ரகுமான் தயாரித்துள்ள இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி மகேஷ் பத்மநாபன் இயக்கியிருக்கிறார். ராஜேஷ் அப்புக்குட்டன் மற்றும் ருத்ரா இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், படம் வரும் டிசம்பர் 31 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தற்போது படத்தின் விளம்பர பணிகளில் தீவிரம் காட்டி வரும் படக்குழு, படத்தின் நாயகி சுபிக்ஷாவையும் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்குமாறு அழைத்துள்ளனர். ஆனால், அவர் தான் வெளியூரில் இருப்பதாக கூறி, விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் டிமிக்கி கொடுத்து வருகிறாராம்.
ஏற்கனவே இசை வெளியீட்டு விழாவுக்கு அவரை அழைத்த போது, ஒரு பொய்யை சொல்லி எஸ்கேப் ஆனவர், தற்போது தொடர்ந்து வெவ்வேறு பொய்களை சொல்லி எஸ்கேப் ஆகிக்கொண்டிருப்பதாக படத்தின் நாயகன் ருத்ரா கூறி வேதனைப்படுகிறார்.
ஒரு பைசா கூட பாக்கி வைக்காமல் முழு சம்பளத்தையும் தயாரிப்பாலர் சுபிக்ஷாவுக்கு கொடுத்துவிட்டதோடு, படம் தொடர்பான அக்ரிமெண்ட் போடும் போது, விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக ஒப்புக்கொண்ட நடிகை சுபிக்ஷா தற்போது அப்படி செய்யாமல், பட விளம்பர நிகழ்ச்சிகளை தவிர்த்து வருவது எதனால், என்று புரியாமல் படக்குழு தவித்து வருகிறது.
படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நாயகன் ருத்ரா ஆகியோர் சுபிக்ஷாவை பல முறை அழைத்தாலும், அவர் தொடர்ந்து பொய்களை சொல்லி விளம்பர நிகழ்ச்சிகளை தவிர்த்து வருவதால், அவர் மீது நடிகர் சங்கத்தில் படக்குழு புகார் அளிக்க உள்ளனர்.
விஜய் மில்டனின் ‘கடுகு’ படத்தில் நாயகியாக நடித்திருந்த சுபிக்ஷா, அதன் பிறகு வாய்ப்பில் இல்லாமல் இருக்க, தற்போது கிடைத்த வாய்ப்பையும் சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் இப்படி படக்குழுவை கதறவிடுவது சரியா?
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...