தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பேரரசுவின் மகள் சுகிஷா பேரரசு ‘மின்மினி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். கடந்த வாரம் வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றதோடு, சுகிஷாவின் நடிப்புக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
இதையடுத்து தனது மகள் விரைவில் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தெரிவித்த இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் சொன்னால் என் மகளை வைத்து படம் இயக்க தான் தயாராக இருப்பதாகவும், தெரிவித்தார்.
இந்த நிலையில், இயக்குநர் பேரரசு கதை, வசனம் எழுத, சாய் ராம்கி திரைக்கதை எழுதி இயக்கிய ‘பழைய பாட்டி’ என்ற குறும்படத்தில் சுகிஷா பேரரசு நடித்துள்ளார். இந்த குறும்படத்தின் வெளியீட்டு விழா நேற்று (டிசம்பர் 24) சென்னையில் உள்ள தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில், கே.பாக்யராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு, ஆர்.கே.செல்வமணி மற்றும் ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் முன்னிலையில் குறும்படத்தை வெளியிட்டார்.
இந்த நிகழ்வில், இயக்குநர்கள் ரவி மரியா, சி.ரங்கநாதன், பிரபாகர், முத்து வடுகு, இசையமைப்பாளர் தினா, சேலம் ஆர்.ஆர் உணவகத்தின் உரிமையாளர் தமிழ்செல்வன் மற்றும் இயக்குநர்கள் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்துக்கொண்டார்கள்.
“குடிச்சவன் மது மயக்கத்தி இருக்க, அவன் குடும்பம் பசி மயக்கத்தில் இருக்கும்” என்ற அவலத்தை ‘பழைய பாட்டில்’ குறும்படத்தில் மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் சாய் ராம்கி.
சில ஆண்டுகளுக்கு முன்பு, பாக்யா வார இதழில் தான் எழுதிய கதையை, தனது உதவியாளர் சாய் ராம்கி இயக்குநராக ஆவதற்கு, பேரரசு கொடுத்துள்ளார்.
குறும்படத்தை பார்த்த பாக்யராஜ், கதை முடியும் இடத்தில் இருந்து தொடங்கி, ஒரு தொடர்கதை சொல்லி, அனைவரையும் வியக்க வைத்தார். சுகிஷா பேரரசு குழந்தை நட்சத்திரமாக எதார்த்தமாக நடித்துள்ளதால், நல்ல எதிர்காலம் இருக்கிறது என்றார்.
ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், ரவி மரியா, தினா ஆகியோர் குழந்தை நட்சத்திரம் சுகிஷா பேரரசு, இயக்குநர் பேரரசு, குறும்படத்தின் இயக்குநர் சாய் ராம்கி ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி, பாராட்டினார்கள்.
மேலும், இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் ஏழாம் ஆண்டு நினைவஞ்சலியை தொடர்ந்து இயக்குநர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட நினைவஞ்சலி விழாவில் கலந்துக்கொண்ட ‘பழைய பாட்டில்’ படக்குழுவினர் கே.பாலச்சந்தர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...