Latest News :

ஜாக்கி சான், அர்னால்ட் இணைந்து நடித்த 'அயர்ன் மாஸ்க்' தமிழில் வெளியாகிறது
Saturday December-25 2021

ஹாலிவுட் சினிமாவின் ஜாம்பவான்கள் ஜாக்கி சான் மற்றும் அர்னால்ட் இணைந்து நடித்த ‘அயர்ன் மாஸ்க்’ திரைப்படம் சீனா, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் மிகப்பெரிய வசூலை ஈட்டிய அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமான இப்படம் தமிழில் வெளியாகிறது.

 

ஜாக்கி சான் மற்றும் அர்னால்ட் ஆகியோர் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கும் இப்படம் 49.1 பில்லியன் பட்ஜெட்டில் மிக பிரமாண்டனமான திரைப்படமாக உருவாகியுள்ளது. வெறித்தனமான சண்டைக் காட்சிகளும், சிரித்து மகிழக்கூடிய காமெடி காட்சிகளும் நிறைந்த இப்படம் தமிழ் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளையடிக்கப் போவது உறுதி.

 

டிரகானை அழித்து மகாராணியை காப்பாற்ற ஜாக்கி சான் சீனா செல்கிறார். முதலில் ஜாக்கி சானை துரத்தும் அர்னால்ட், பிறகு அவருடன் இணைந்து டிராகன் மற்றும் வில்லனுடன் மோதுகிறார்கள். இறுதியில் டிராகனை அழித்து, மகாராணியை காப்பாற்றினார்களா இல்லையா, என்பதே கதை.

 

‘ஜூராசிக் பார்க், ‘கிங்காங்’ போன்ற படங்களை தமிழில் வெளியிட்ட பிரபல நிறுவனமான ஹன்சா பிக்சர்ஸ் ‘அயர்ன் மாஸ்க்’ திரைப்படத்தை தமிழில் வெளியிடுகிறது.

 

எம்.ஜி.ஆர் - சிவானி, ரஜினி - கமல், விஜய் - அஜித் ஆகியோர் இணைந்து நடித்தால் தமிழ் சினிமாவில் எப்படி ஒரு பரபரப்பு ஏற்படுமோ, அத்தகைய ஒரு பரபரப்பை உலக அளவில் ஏற்படுத்திய ‘அயர்ன் மாஸ்க்’ தமிழகத்திலும் அப்படி ஒரு பரபரப்பை ஏற்படுத்த இம்மாதம் வெளியாகிறது.

Related News

7955

’பிரேமலு’ மாதிரி ’2K லவ் ஸ்டோரி’ பெரிய கலக்சன் எடுக்கும் படமாக இருக்கும் - இயக்குநர் சுசீந்திரன் உறுதி
Thursday January-23 2025

சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...

விக்ரமின் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
Thursday January-23 2025

இயக்குநர்  எஸ் . யூ.  அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...

’ஆஃபிஸ்’ தொடரின் தலைப்பு பாடலை வெளியிட்ட டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்!
Thursday January-23 2025

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின்  டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...

Recent Gallery