Latest News :

விஜய் ஆண்டனிக்கு ஜோடியான மேகா ஆகாஷ்
Sunday December-26 2021

விஜய் மிலடன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வரும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சரத்குமார் முக்கியமான கதாப்பாத்திரம் ஒன்றில் நடிக்கும் இப்படத்தின் மூலம் பிரபல கன்னட நடிகர்கள் தனஞ்செயா மற்றும் ப்ருத்வி அம்பர் ஆகியோர் தமிழ் சினிமாவில் அறிமுமமாகிறார்கள். இவர்களுடன் நடிக்க, சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, தலைவாசல் விஜய், சுரேந்தர் தாகூர் பிரணிதி ஆகியோர் நடிக்க, இயக்குநர் ரமணா வித்தியாசமான வேடம் ஒன்றில் நடிக்கிறார்.

 

இந்த நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க இளம் நடிகை மேகா ஆகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இதனை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

 

இன்பிடினிட்டி பிலிம் வெண்ட்சர்ஸ் சார்பில் கமல் போஹ்ரா, லலிதா தனஞ்செயன், பிரதீப்.பி, பங்கஜ் போஹ்ரா, எஸ்.விக்ரம் குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ ஆக்‌ஷன் கமர்ஷியல் திரைப்படமாக உருவாகி வருகிறது.

Related News

7957

’இந்தியன் 2’ படத்திற்காக லைகா நிறுவனம் மேற்கொள்ளும் பிரமாண்ட விளம்பர பணிகள்!
Friday June-28 2024

கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் விளம்பர பணிகளை லைகா நிருவனம் மிக பிரமாண்டமான முறையில் செய்து வருகிறது...

’கொட்டேஷன் கேங்’ படம் சன்னி லியோன் மீதான உங்கள் பார்வையை மாற்றிவிடும் - நடிகை பிரியாமணி நம்பிக்கை
Friday June-28 2024

ஜாக்கி ஷெராப், பிரியாமணி, சன்னி லியோன் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘கொட்டேஷன் கேங்’...