திரைப்படங்களின் விளம்பர பணிகளுக்காக படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே படத்தின் முக்கிய கலைஞர்களை வைத்து போட்டோ ஷூட் நடத்துவது வழக்கமாக இருந்தது. ஆனால், இப்போது போடோ ஷூட் கலாச்சாரம் குறைந்துவிட்டது. ஒன்று இரண்டு படங்களுக்கு மட்டும் இதுபோன்ற போட்டோ ஷூட் நடத்தப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் வெளியான ஒரு படத்தின் போட்டோ ஷூட் பலரையும் வாய் பிளக்க வைத்துள்ளது.
நட்டி நட்ராஜ் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிக்கும் தலைப்பு வைக்கப்படாத புதிய படத்திற்காக தான் அத்தகைய போட்டோ ஷூட் நடத்தப்பட்டுள்ளது. எஸ்.ஜே.எஸ் பிரிண்ட்ஸ் டாக்கீஸ் நிறுவனம் சார்பில் சாய் சரவணன் தயாரிக்கும் இப்படத்தின் மூலம், பிரபல ஒளிப்பதிவாளர் கே.பி.தனசேகர் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இந்த படத்தில் நட்டி நட்ராஜுக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஒருவர் நடிக்க இருக்கிறாராம். தற்போது அவருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வரும் படக்குழுவினர் அந்த நடிகை யார்? என்பதை விரைவில் அறிவிக்க உள்ளனர்.
இந்த நிலையில், படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் ராம்கி, மனோபாலா, ரவிமரியா, மொட்டை ராஜேந்திரன், சஞ்சனா சிங், அஸ்மிதா ஆகியோரை வைத்து சமீபத்தில் போட்டோ ஷூட் ஒன்றை படக்குழுவினர் நடத்தினார்கள். தற்போது அந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
குறிப்பாக நடிகைகள் சஞ்சனா சிங் மற்றும் அஸ்மிதா ஆகியோரது கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “இப்படி ஒரு போட்டோ ஷூட்டா!” என்று வியக்கும் அளவுக்கு கவர்ச்சி சற்று தூக்கலாகவே இருக்கிறது.
மிக பிரமாண்டமான முறையில் உருவாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமான், ஊட்டியை அடுத்துள்ள கூடலூர், தேவாலா, பந்தலூர் போன்ற பகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில், பாடல் காட்சிகள் அனைத்தையும் அந்தமானில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
தேவராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சத்திய தேவ் இசையமைக்கிறார். கீர்த்தி வாசன் வசனம் எழுத, மக கவி, வெள்ளத்துரை பாடல் எழுதுகிறார்கள்.
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...