தமிழ் சினிமாவின் முன்னணி இரட்டையர் சண்டைக்காட்சி இயக்குநர்களான அன்பறிவ், ராகவா லாரன்ஸ் தயாரித்து ஹீரோவாக நடிக்கும் ‘துர்கா’ படத்தின் மூலம் இயக்குநர்களாக அறிமுகமாகிறார்கள்.
கதிரேசன் தயாரித்து இயக்கும் ‘ருத்ரன்’ மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் கதை எழுதி, கதிரேசனுடன் இணைந்து தயாரிக்கும் ‘அதிகாரம்’, ‘சந்திரமுகி 2’ ஆகிய படங்களில் நடித்து வரும் ராகவா லாரன்ஸ், தனது ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் ‘துர்கா’ படம் குறித்த அறிவிப்பை கடந்த ஆண்டு வெளியிட்டார். ஆனால், அப்படத்தின் இயக்குநர் யார்? என்பதை அறிவிக்கவில்லை.
இந்த நிலையில், ‘துர்கா’ படத்தை பிரபல ஸ்டண்ட் இயக்குநர்கள் அன்பறிவ் இயக்க இருப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ், அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மேலும், படத்தில் நடிக்க இருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...