இயக்குநர் பா.இரஞ்சித்தின் இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் கடந்த ஆண்டு நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதோடு, ஒடிடி-யில் அதிகம் பேர் பார்த்த திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றது. அப்படத்தை தொடர்ந்து பா.இரஞ்சித் ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தை இயக்கி வந்தார்.
பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் யாழினி பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தென்மா இசையமைக்கிறார். கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், நேற்றுடன் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்துள்ளது.
இறுதி நாள் படப்பிடிப்பை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...