19 வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குநர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்த ‘சேத்துமான்’ படம் விருது வென்றது.
கடந்த ஒரு வாரமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்த சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று நிறைவடைந்தது. இன்று நடைபெற்ற நிறைவு விழாவில் சிறந்த படங்களுக்கு விருது வழங்கப்பட்டது.
இதில் மொத்த மூன்று படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இயக்குநர் வசந்த் சாய் இயக்கிய ’சிவரஞ்சனியும் சில பெண்களும்’ படத்திற்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. மற்ற இரண்டு திரைப்படங்களுக்கு இரண்டாம் பரிசு வழங்கப்பட்டது.
இயக்குநர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கிய ‘சேத்துமான்’ படத்திற்கும், கணேஷ் விநாயக் இயக்கிய ‘தேன்’ படத்திற்கும் இரண்டாம் பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் வசந்தபாலன், “’சேத்துமான்’ திரைப்படத்தை தயாரித்த இயக்குநர் பா.இரஞ்சித்துக்கு வாழ்த்துகள். மராட்டிய படமான ‘பான்றி’ படம் கொடுத்த தாக்கத்தை ’சேத்துமான்’ படமும் கொடுத்தது. எழுத்தாளர் பெருமாள் முருகனின் கதை திரைப்படமாகியிருப்பது பெரும் மகிழ்ச்சி. எழுத்தாளர்களின் சினிமா வருகை ஆரோக்கியமானது.” என்றார்.
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...