முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பதை விட ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள புதுமுக ஹீரோக்களின் படங்களிலும், கதையின் நாயகியாகவும் நடிப்பதில் முன்னணி நடிகைகள் பலர் தீவிரம் காட்டி வருகிறார். இந்த பாதையில் முதலில் நயந்தாரா பயணிக்க, தற்போது திரிஷாவும் இதே பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளார்.
‘கர்ஜனை’, ‘சதுரங்க வேட்டை 2’ உள்ளிட்ட ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள நான்கு ஐந்து படங்களில் நடித்து வரும் திரிஷா, தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்களிடம் புது கண்டிஷனையும் போடுகிறாராம்.
அது என்ன கண்டிஷன் என்று விசாரிக்கையில், “தன்னிடம் கதை சொல்ல வேண்டும் என்றால், அந்த கதை ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக இருக்க வேண்டும், அப்படி இருந்தால் கதை சொல்ல வாங்க இல்லனா, இந்த பக்கம் வராதீஇங்க” என்று கண்டிஷன் போடும் திரிஷா, அதில் ரொம்ப கராராகவும் இருக்கிறாராம்.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...