இசையமைப்பாளராகவும், நடிகராகவும் கோலிவுட்டில் வலம் வரும் தர்புகா சிவா, ‘முதல் நீ முடிவும் நீ’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகா உள்ளார். 90 களின் பிறபகுதியில் வளர்ந்து வரும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் நியூயார்க் சர்வதேச திரைப்பட விழா, மாசிடோனியாவில் நடைபெற்ற ஆர்ட் ஃபிலிம் விருது உள்ளிட்ட பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று சிறந்த படம், சிறந்த இயக்குநர் உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளது.
இந்த நிலையில், சர்வதேச ரசிகர்களை கவர்ந்த இப்படம் வரும் ஜனவரி 21 ஆம் தேதி முதல் தமிழக ரசிகர்களை சென்றடைய உள்ளது. ஆம், இப்படம் வரும் ஜனவரி 21 ஆம் தேதி நேரடியாக ஜீ5 ஒடிடி தளத்தில் வெளியாகிறது.
அமிர்தா மாண்டரின், பூர்வா ரகுநாத், கே.ஹரிஷ், சரண் குமார், ராகுல் கண்ணன், நரேன் விஜய், மஞ்சுநாத் நாகராஜன், மீத்தா ரகுநாத், வருண் ராஜன், சரஸ்வதி மேனன், சச்சின், கௌதம் ராஜ் சி.எஸ்.வி, ஹரினி ரமேஷ், கிஷன் தாஸ் உட்பட இளம் நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ள இப்படத்தை இயக்கியிருக்கும் தர்புகா சிவா இசையும் அமைத்திருக்கிறார்.
இந்த படத்தின் இசைப் பாடல்கள், ஏற்கனவே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக, சித் ஸ்ரீராம் குரலில், பாடலாசிரியர் தாமரை எழுதிய இப்படத்தின் டைட்டில் பாடல், பல்வேறு வானொலி நிலையங்களின் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.
சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு செய்துள்ளார். தாமரை, கீர்த்தி, காபர் வாசுகி ஆகியோர் பாடல் எழுதியுள்ளனர்.
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...