Latest News :

நடிகர் சிலம்பரசனுக்கு கெளரவ டாக்டர் பட்டம்!
Saturday January-08 2022

நடிகர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், கமல்ஹாசன், விக்ரம், விஜய் உள்ளிட்ட பல நட்சத்திரங்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்த வேல்ஸ் பல்கலைக்கழகம், நடிகர் சிலம்பரசனுக்கும் கெளரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளது.

 

பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் பலருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்து வரும் சென்னையின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் பல்கலைக்கழகம், திரைத்துறையில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள் பலருக்கு ஒவ்வொரு ஆண்டும் டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு நடிகர் சிலம்பரசனுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவிக்க உள்ளது.

 

இது குறித்து வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும், தலைவரும் வேந்தருமான டாக்டர்.ஐசரி கே.கணேஷ் கூறுகையில், “மரியாதைக்குரிய நடிகர் சிலம்பரசன் டி.ஆர் அவர்களுக்கு இந்த கவுரவ டாக்டர் பட்டதைக் கொடுப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் பல்கலைக்கழகத்தில் இந்த விருதுக்கு தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கென்று ஒரு குழு இருக்கிறது. அவர்கள் பல்வேறு துறைகளிலும் சாதனை செய்யும் பிரபலங்களை கவனமாக ஆய்வு செய்து இறுதிப் பட்டியலை முடிவு செய்வார்கள். அந்த வகையில் ஆறு மாத குழந்தையாக இருக்கும் போதே திரைத்துறையில் நடிக்க வந்தவர் சிலம்பரசன். விரைவில் அவருக்கு 39 வயது ஆகப்போகிறது. ஒருத்தரோட வயதும், அவரோட கேரியரும் ஒரே ஆண்டாக அமைவது அபூர்வம். அப்படியொரு ஆசிர்வதிக்கப்பட்ட கலைஞன் தான் சிலம்பரசன். நடிப்பு, இயக்கம், இசை, பாடகர் என சினிமாவில் பல்வேறு துறைகளிலும் இப்போது வரை சாதனை படைத்து வரும் அவரின் சாதனையைக் கெளரவிப்பதன் பொருட்டே இந்த கெளவுரவ டாக்டர் என்கிற அங்கீகாரம். அதை எங்கள் வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்குவதில் எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி.” என்கிறார்.

 

Isari Ganesh

 

வரும் ஜனவரி 11 ஆம் தேதி வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் நடிகர் சிலம்பரசன் கெளரவ டாக்டர் பட்டம் பெற இருக்கிறார்.

Related News

7981

சன்னி தியோல் மற்றும் கோபிசந்த் மிலினேனி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஜூன் 22 ஆம் தேதி தொடங்குகிறது!
Thursday June-20 2024

இந்தியாவையே தன் ’கதர் 2’  படம்  மூலம் திரும்பிப் பார்க்க வைத்த பாலிவுட் நட்சத்திர நடிகர் சன்னி தியோல், தன் அடுத்த படத்தைத் துவக்கியுள்ளார்...

’குட் நைட்’ பட தயாரிப்பு நிறுவனங்களுடன் கைகோர்த்த ஆர்ஜே பாலாஜி!
Thursday June-20 2024

‘குட் நைட்’ மற்றும் ‘லவ்வர்’ என்று ரசிகர்களை கொண்டாட வைத்த வெற்றி படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்...

பிரபு தேவாவின் புதிய படத்தின் தலைப்பு ‘மூன் வாக்’!
Wednesday June-19 2024

பிரபல டிஜிட்டல் ஊகமான பிகைண்ட்உட்ஸ் (Behindwoods) தயாரிக்கும் திரைப்படத்தை அந்நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலருமான (CEO) மனோஜ்...