காயன்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், விவேக பாரதி இயக்கத்தில் விக்னேஷ் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாசக்கார பய’. இப்படத்தில் நாயகியாக காயத்ரி நடிக்க, மற்றொரு நாயகனாக பிரதாப் நடித்திருக்கிறார். இவர்களுடன் கஞ்சா கருப்பு, தேனி முருகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கே.வி.மணி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு செளந்தர்யன் இசையமைத்திருக்கிறார். அறிவுமதி, டாக்டர்.கிருதியா, செங்கதிர்வாணன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.
தன்னை காதலிக்காவிட்டாலும் வேறு ஒருவரை காதலிப்பதை பெருமையாக நினைக்கும் காதலி, தன் சகோதரி மகளின் வாழ்க்கையை மேம்படுத்த பாடுபடும் மாமனின் கருணை உள்ளம். இவர்களுக்கிடையில் நுழையும் மூன்றாவது நபர். இவர்களுக்கு இடையே நடக்கும் காதல் போராட்டத்தையும், குடுமப் உறவுகளின் மேன்மையையும் சொல்லும் குடும்ப பாங்கான திரைப்படமாக உருவாகியுள்ளது ‘பாசக்கார பய’.
செளந்தர்யன் இசையமைப்பில் இப்படத்தில் இடம்பெற்று ஐந்து பாடல்களும் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில், ”சிஞ்சனக்கன செனச்சனக்கன கிழிஞ்சது வேட்டி...” என்ற பாடல் தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்து வருவதோடு, திருவிழா மற்றும் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் ஆட்டம் போடும் வைக்கும் பாடலாகவும் ஒலித்து வருகிறது.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகை வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி ‘பாசக்கார பய’ தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...