கலைமாமணி திருமதி.பாம்பே ஞானம் சுப்பிரமணியம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பிரம்மாண்ட நாயகன்’. திருப்பதி சுவாமி ஸ்ரீவெங்கடாஜலபதி பற்றிய ஆன்மீக திரைப்படமான இப்படத்தில் சுவாமி ஸ்ரீவெங்கடாஜலபதியாக ஆர்யன் ஷ்யாம் நடிக்க, அதிதி மகாலட்சுமியாகவும், சந்தியா பத்மாவதி தேவியாகவும் நடித்திருக்கிறார்கள்.
திருப்பதி என்றாலே சுவாமி பாலாஜியும், அக்கோவிலில் வழங்கப்படும் பிரசாதமான லட்டும் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், இதுவரை யாரும் அறிந்திராத திருப்பதி கோவிலின் வரலாறு மற்றும் அங்கு சுவாமி ஸ்ரீவெங்கடாஜலபதி எப்படி வந்தார், உள்ளிட்ட பல சுவாரஸ்யமான தகவல்களோடும், உண்மை சம்பவங்களோடும் உருவாகியுள்ள இப்படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், இப்படத்தில் ஸ்ரீவெங்கடாஜலபதி வேடத்தில் நடித்த ஆயன் ஷ்யாம், அப்படியே கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருப்பதோடு, என்.டி.ஆர்-க்கு பிறகு கடவுள் கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாகவும் இருக்கிறார், என்று பலரிடம் பாராட்டு பெற்று வருகிறார்.
இந்த நிலையில், ’பிரம்மாண்ட நாயகன்’ படத்தைப் பார்த்த திருப்பதி தேவஸ்தான் தலைவர் மற்றும் அவரது குழுவினர் படக்குழுவினரையும், இயக்குநர் பாம்பே ஞானத்தையும் பாராட்டியதோடு, படத்தில் திருப்பதி சுவாமி ஸ்ரீவெங்கடாஜலபதியாக நடித்த ஆர்யன் ஷ்யாமை, கட்டி பிடித்து பாராட்டியதோடு, பகவான் பாலாஜியாகவே இந்தப் படத்தில் வாழ்ந்துக்காட்டியிருக்கிறீர்கள். அவரை திரைப்படம் மூலமாக தரிசனம் பண்ற பாக்கியத்தை எங்களுக்கு கொடுத்துவிட்டீர்கள். என்று புகழ்ந்துள்ளனர்.
மேலும், இந்த படத்திற்காக விரதம் இருந்து நடித்ததை குறிப்பிட்டு பாராட்டிய தேவஸ்தான தலைவர், நடிகர் ஆர்யன் ஷ்யாமிற்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ’யூத் சூப்பர் ஸ்டார்’ (youth Superstar) என்ற பட்டத்தை வழங்கி கெளரவித்திருப்பதோடு, இது தொடர்பாக தேவஸ்தான தலைவர் துஷ்மந்த் குமார் தாஸ், ஆர்யன் ஷ்யாமை பாராட்டி கடிதமும் கொடுத்திருக்கிறார்.
எஸ்.ஆனந்த்பாபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு திவாகர் சுப்பிரமணியம் இசையமைத்திருக்கிறார். அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ள ‘பிரம்மாண்ட நாயகன்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இப்படத்தை தொடர்ந்து ஏ.வி.எம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அமானுஷ்யம் மற்றும் பிளாக் மேஜிக்கை மையப்படுத்திய சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானர் திரைப்படமாக உருவாகியுள்ள ‘அந்த நாள்’ படத்தில் ஆர்யன் ஷ்யாம் நடித்துள்ளார். இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படத்திற்கு பிறகு மேலும் பல படங்களில் நடிப்பது குறித்த பேச்சு வார்த்தையில் ஆர்யன் ஷ்யாம் ஈடுபட்டுள்ளார்.
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...