பிரபுதேவா நடிப்பில், ‘தூத்துக்குடி’ பட புகழ் ஹரிகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தேள்’. பல வெற்றி படங்களை தயாரித்து வரும் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான கே.இ.ஞானவேல்ராஜா, தனது ஸ்டுடியோ க்ரீன் சார்பில் தயாரித்துள்ள இப்படம் பொங்கல் கொண்டாட்டமாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஏற்கனவே இப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்த படகுழு இன்று, படம் வெளியாகும் திரையரங்கங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
பொங்கல் பண்டிகையில், குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்கள் வெளியாவது ஒரு வெற்றிகரமான அம்சமாக கடந்த காலங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. குடும்பங்கள் ஒன்று கூடி, கொண்டாடும் விழா கோலத்தின் ஒரு பகுதியாக புதிய திரைப்பட வெளியீடுகளும் அமைந்திருக்கும். குறிப்பாக, இந்த விழாக்காலத்தில் திரைப்படங்களுக்கு குடும்ப பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும், இது பல ஆண்டுகளாக வெற்றிகரமான பொங்கல் வெற்றி திரைப்படங்கள் மூலம் தெளிவாக நிரூபணம் ஆகியுள்ளது. அந்த வகையில் ஒரு விழாக்கால கொண்டாட்டமாக, குடும்ப உறவுகள், உணர்வுபூர்வ கதை, நகைச்சுவை, ஆக்ஷன் நல்ல இசை மற்றும் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ‘தேள்’ திரைப்படம், குடும்ப பார்வையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான விருந்தாக இருக்கும் என்று தயாரிப்பு நிறுவனம் உறுதியாக நம்புகிறது.
இயக்குநர் ஹரிக்குமார் எழுதி இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் நடிகர் பிரபுதேவா, நடிகை சம்யுக்தா ஹெக்டே முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் ஈஸ்வரி ராவ், யோகிபாபு மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
சி.சத்யா இசையமைத்துள்ள இப்படத்திற்கு விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்ய, பொன் பார்த்திபன் வசனம் எழுதியுள்ளார். அன்பறிவு சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, செந்தில் ராகவன் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...