பிக் பாஸ் நிகழ்ச்சியை கலக்கிய ஓவியா, தற்போது மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் 100 வது நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் யார் பிக் பாஸ் டைடிலை வெள்ளப் போகிறார்கள்: என்று தெரிந்துவிடும்.
ஹரிஷ் கல்யாண், சினேகன், கணேஷ் வெங்கட்ராம், ஆரவ் என நான்கு போட்டியாளர்களில் ஒருவர் தான் பிக் பாஸ் டைடிலுக்கான சொந்தக்காரர் என்றாலும், இப்போட்டியின் ஆரம்பத்தில் பங்கேற்ற அத்தனை போட்டியாளர்களும் இந்த 100 வது நாள் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். ஏகோபித்த ரசிகர்களின் ஆதரவு பெற்ற ஓவியாவும் இதில் பங்கேற்றுள்ளார்.
ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் பங்கேற்றிருப்பதை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் செமயாக கொண்டாடும் வகையில் மீம்ஸ்களும், ட்வீட்களும் என அமர்க்களப்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், ஓவியா நடிக்கும் படம் ஒன்றில், அவருக்கு ஜோடியாக ஆரவை நடிக்க வைக்க இயக்குநர் ஒருவர் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆரவை துரத்தி துரத்தி காதலித்த ஓவியா, காதல் தோல்வியால் பித்து பிடித்தது போல சுற்றி வந்த நிலையில், தற்போது மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பியிருப்பவர், படங்களிலும் பிஸியாக நடிக்க தொடங்கியுள்ளார். அவருக்கு பல வாய்ப்புகள் வந்துக்கொண்டிருக்க அதில் ஒன்றில் தான் அவருக்கு ஆரவை ஜோடியாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஏராளமான ரசிகர்கள் எனக்காக இருக்கும் போது, நான் ஏன் ஒருவரை காதலிக்க வேண்டும்? என்று சமீபத்தில் கேள்வி எழுப்பியிருந்த ஒவியா, ஆரவுடன் நடிக்க நோ சொல்வாரா எஸ் சொல்வாரா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...