ஆங்ரி ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ராஜசேகர் நடிப்பில் உருவாகும் படம் ‘சேகர்’. அவருடைய 91 வது திரைப்படமாக உருவாகும் இப்படத்தை அவரது மனைவியும் பிரபல நடிகையுமான ஜீவிதா ராஜசேகர் இயக்க, இந்த நட்சத்திர தம்பதியின் மூத்த மகளான ஷிவானி ராஜசேகர், படத்திலும் ராஜசேகரின் மகள் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
புதுமையான திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தை பீரம் சுதாகர ரெட்டி, ஷிவானி ராஜசேகர், ஷிவாத்மிகா ராஜசேகர் மற்றும் பொக்ரம் வெங்கட ஸ்ரீனிவாஸ் ஆகியோர் இணைந்து பீகாசஸ் சினிகார்ப், ( Pegasus Cinecorp), தரஸ் சினிகார்ப் (Taurus Cinecorp), சுதாகர் இம்பக்ஸ் ஐபிஎல் (Sudhakar Impex IPL), மற்றும் திரிபுரா கிரியேஷன்ஸ் (Tripura Creations) ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிக்கின்றனர்.
இப்படம் குறித்து இயக்குநர் ஜீவிதா ராஜசேகர் கூறுகையில், “இத்திரைப்படத்தில் ராஜசேகருக்கும் ஷிவானிக்கும் இடையேயான காட்சிகள் ரசிகர்களுக்கு பெரிய ஈர்ப்பை தரும் வகையில் இருக்கும். அவர்கள் நிஜ வாழ்க்கையில் எப்படி இருக்கிறார்களோ, அப்படியே தான் படத்திலும் வருகிறார்கள். படத்தின் காட்சிகள் அனைத்தும் வெகு இயல்பானதாகவும் அவர்களின் நடிப்பும் தத்ரூபமாக இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளோம். படத்தின் முதல் காட்சித்துணுக்கும், 'லவ் காண்டே' பாடலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் அனைத்து அம்சங்களும் ரசிகர்களை கவரும் வகையில் சிறப்பாக இருக்கும். படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.” என்றார்.
இப்படத்தில் டாக்டர் ராஜசேகர், ஆத்மிய ராஜன், 'ஜார்ஜ் ரெட்டி' புகழ் முஸ்கான் குப்சந்தனி, ஷிவானி ராஜசேகர், அபினவ் கோமதம், கன்னட கிஷோர், சமீர், பரணி, ரவிவர்மா, ஷ்ரவன் ராகவேந்திரா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
லட்சுமி பூபாலா கதை எழுதியுள்ள இப்படத்திற்கு மல்லிகார்ஜுன் நரகனி ஓளிப்பதிவு செய்துள்ளார். அனுப் ரூபன்ஸ் இசையமைக்க, சம்பத் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...