சோனி பிக்சர்ஸ் இந்தியா நிறுவனத்துடன் நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படம் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனத்தின் 51 வது திரைப்படமாக உருவாகிறது.
இப்படம் குறித்து கமல்ஹாசன் கூறூகையில், “ஒரு சிறந்த திரைப்படம் ரசிகர்களிடம் தாக்கத்தை உருவாக்க வேண்டும். இந்தத் திரைப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை அளிக்கும். சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரிப்பதில் பெருமையடைக்கிறேன்” என்றார்.
இப்படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன் கூறுகையில், “இந்தத் திரைப்படத்தில் நடிப்பது என்பது கலவையான பலவித உணர்வுகளை எனக்கு வழங்குகிறது. உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் இந்திய சினிமாவின் தலைசிறந்த கலைஞர். கலைஞானி. சர்வதேசத் திரையுலகில் தமிழ் சினிமாவின் அடையாளமாக வாழ்பவர். கலைமேதை கமல்ஹாசன் அவர்கள் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறேன் என்பதே எனக்குப் பெருமையாகவும் பெரும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. சர்வதேச அளவில் பல வெற்றிப் படங்களை வழங்கிய சோனி பிக்சர்ஸ் உடன் இணைந்து பணியாற்றுவதிலும் பெருத்த மகிழ்ச்சி அடைகிறேன். இவை அனைத்தும் சாத்தியமாவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் என் நண்பர், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அவர்கள்தான். அவருடைய சிறப்பான திரைக்கதையினால் இப்படம் வெற்றியடையும் என் உறுதியாக நம்புகிறேன். என் சினிமா வாழ்க்கையில் இப்படம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். இந்தத் திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் எப்போது தொடங்கும் என ஆவலோடு இருக்கிறேன்” என்றார்.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கூறுகையில், “சிறப்பானதும் புதுமையானதுமான கதை அம்சம் கொண்ட இந்தப் படத்தை இயக்குவதில் பெருமிதம் அடைகிறேன். நான் சிறுவயதில் இருந்தே உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் தீவிர ரசிகன். அவர்மீது எனக்கு தனி மரியாதை உண்டு. அவருடைய நடிப்பு மற்றும் பன்முக திறமைகளைக் கண்டு வியந்திருக்கிறேன். இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் சிவகார்த்திகேயன் அவர்கள் எனக்கு மிக நெருங்கிய நண்பர். இந்தப் படத்தை இயக்குவது என் மனதிற்குப் பிடித்த ஒன்று. மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனங்களான ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் உடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்
சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் விவேக் கிருஷ்ணானி கூறுகையில், ”திரையுலக ஜாம்பவான் கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்றுவது சோனி பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு ஒரு சிறப்பான அனுபவமாக இருக்கும். ராஜ்குமார் பெரியசாமியின் கதை சொல்லும் திறமையாலும், பெரும் ரசிகக் கூட்டத்தின் மனங்களை ஈர்த்திருக்கும் சிவகார்த்திகேயனின் ஆற்றல்மிகு நடிப்பினாலும் இப்படம் நிச்சயம் பார்வையாளார்களால் கொண்டாடப்படும். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இது ஒரு மறக்க முடியாத திரை அனுபவமாக இருக்கும். தனக்கென தனிச்சிறப்புகள் கொண்ட தமிழ்த் திரையுலகில் இத்திரைப்படத்தின் மூலம் கால் பதிப்பதில் சோனி பிக்சர்ஸ் பெருமையடைகிறது. பிராந்திய மொழிகளின் சினிமாச் சூழலை நன்கு அறிந்த, இந்திய சினிமாவில் கணிசமான தாக்கத்தை உருவாக்கிய திரையுலக ஆளுமைகளோடும், இளம் தலைமுறைகளோடும் அதிகளவில் எங்கள் பணி தொடருமென நம்புகிறோம்” என்றார்.
கதாநாயகன் பிருத்விராஜ் நடித்த ‘நைன்’ எனும் மலையாளத் திரைப்படம் மூலம் தென்னிந்திய திரையுலகில் கால் பதித்தது சோனி பிக்சர்ஸ் நிறுவனம். மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் ‘மேஜர்’ எனும் திரைப்படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகில் அறிமுகமானது. தற்போது, தமிழ் சினிமாவில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் உடன் இணைந்து இன்னும் பெயரிடப்படாத திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...