விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று மாதங்களாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி, டிவி பார்க்காதவர்களையும் பார்க்க வைத்த நிகழ்ச்சி என்ற பெருமையை பெற்றது. அந்த நிகழ்ச்சியின் இத்தகைய வெற்றிக்கு நடிகை ஓவியாவும், அவரது காதலும் முக்கிய காரணமாகும்.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுது நாளான, அதாவது போட்டியின் 100 வது நாளான இன்று, அப்போட்டியின் வெற்றியாளர் யார்? என்ற எதிர்ப்பார்ப்பு தமிழக மக்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், ஹாரிஸ் கல்யாண், சினேகன், கணேஷ் வெங்கட்ராம், ஆரவ் என்ற நான்கு போட்டியாளர்களில், சினேகன் அல்லது கணேஷ் வெங்கட்ராம் இருவரில் ஒருவர் நிச்சயம் வெற்றி பெறுவார்கள், என்றும் கணிக்கப்பட்டது.
ஆனால், மக்களின் கணிப்பை பொய்யாக்கும் விதத்தில், ஓவியா காதலித்த ஆரவுக்கு பிக் பாஸ் டைடிலை வழங்க விஜய் டிவி முடிவு செய்திருப்பதாக, சற்று நேரத்திற்கு முன்பாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு ஏற்றவாறு சமூக வலைதளங்களிலும், ஆரவ் வெற்றி பெற்றது போன்ற புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...