‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘விருமன்’ ஆகிய படங்களை முடித்துவிட்ட கார்த்தி, தற்போது ‘சர்தார்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பும் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், கார்த்தியின் அடுத்தப் பற்றிய தகவல் கசிந்துள்ளது.
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘பேச்சுலர்’ படத்தை இயக்கிய சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் தான் கார்த்தி அடுத்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சதீஷ் செல்வகுமார் கார்த்தியிடம் ஒரு கதை சொல்ல, அது அவருக்கு பிடித்துவிட்டதாம். முழு திரைக்கதையையும் எழுதுமாறு சதீஷிடம் கார்த்தி கூறியிருக்கிறாராம்.
இதையடுத்து, சதீஷ் செல்வகுமாருக்கு ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் அட்வான்ஸ் கொடுத்து ஒப்பந்தம் செய்துவிட்டதாம். தற்போது முழு திரைக்கதை உருவாக்க பணியில் ஈடுபட்டுள்ள சதீஷ் செல்வகுமார், தான் கார்த்தியின் அடுத்த திரைப்படத்தை இயக்கும் இயக்குநர் என்பது உறுதியாகியுள்ளது.
இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வமான தகவலை படக்குழுவினர் விரைவில் அறிவிக்க இருக்கிறார்களாம்.
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...