விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் ‘ரத்தம்’ திரைப்படத்தை சி.எஸ்.அமுதன் இயக்குகிறார். இன்பினிட்டி பிலிம் வெஞ்சர்ஸ் சார்பில் கமல் போரா, லலிதா தனஞ்செயன், பி.பிரதீப், பங்கஜ் போரா மற்றும் எஸ்.விக்ரம் குமார் ஆகியோர் தயாரிக்கும் இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மூன்று நடிகைகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து வர்த்தக ரீதியாக பெரும் வரவேற்பு பெற்று வருவதால், அவரது படங்களுக்கு ரசிகர்களிடம் மட்டும் இன்றி திரையுலகினரிடமும் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டு வரும் நிலையில், சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘ரத்தம்’ படமும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தற்போது இப்படத்தில் திரையுலகின் முன்னணி நடிகைகளான மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கவுள்ளனர் என்பது படத்திற்கு மேலும் பலம் சேர்த்துள்ளது.
‘தமிழ்ப் படம்’ என்ற தனது முதல் படம் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட சி.எஸ்.அமுதன், ’ரத்தம்’ படம் மூலம் முற்றிலும் மாறுபட்ட களத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். இது ஒரு அரசியல் திரில்லர் படமாக உருவாகிறது. இப்படத்தில் நகைச்சுவை நடிகர் ஜெகன் கிருஷ்ணா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்திற்கு ஒளிப்பதிவு கோபி அமர்நாத், இசையமைப்பாளர் கண்ணன், எடிட்டிங் சுரேஷ், சண்டைக்காட்சிகளை திலீப் சுப்பராயன் அமைத்துள்ளார்.
தற்போது 40 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கும் ‘ரத்தம்’ படத்தின் எஞ்சிய படப்பிடிப்பை பிப்ரவரி மாதத்தில் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தை கோடைக்கால வெளியீட வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்பினிட்டி பிலிம் வெஞ்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ‘கொலை’ மற்றும் ‘மழை பிடிக்காத மனிதன்’ ஆகிய படங்களில் நடித்து வரும் விஜய் ஆண்டனி, ’ரத்தம்’ படம் மூலம் அந்நிறுவனத்துடன் மூன்றாவது முறையாக கைகோர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...