நடிகர்களால் ஈர்க்கப்பட்ட நடிகைகள், அதற்கு காரணமாக அவர்களின் நடிப்பு, பழகும் முறை உள்ளிட்ட பல விஷயங்களை காரணமாக சொல்வதுண்டு. ஆனால், ஒரு நடிகையோ, நடிகர் ஒருவரிடம் இருக்கும் ஆன்மீகத்தால் ஈர்க்கப்பட்டதாக கூறியிருக்கிறார்.
ஜீவா நடித்த ‘சீறு’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரியா சுமன். இவர் தற்போது சந்தானம் நாயகனாக நடித்துள்ள ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ மற்றும் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் ‘மன்மத லீலை’ ஆகிய படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.
இரண்டு முக்கியமான திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருப்பது குறித்து கூறிய ரியா சுமன், ’ஏஜென்ட் ஸ்ரீவஸ்தவா’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் ரீமேக்காக ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படம் இருந்தாலும், ஒரிஜினல் தெலுங்கு படத்தை நான் பார்க்கவில்லை. காரணம், அதை இயக்குநர் மனோஜ் பீதா விரும்பவில்லை. அதன் தாக்கம் என்னுள் வந்துவிடக்கூடாது என்று நினைத்தார். அதன்படி படத்தை முடித்த பிறகு தான் நான் ஒரிஜினல் தெலுங்கு படத்தை பார்த்தேன், துப்பறியும் நபரின் உதவியாளராக இருக்கும் கதாப்பாத்திரம் என்பதை தவிர, தெலுங்கு பதிப்புக்கும், தமிழில் நான் நடித்த கதாப்பாத்திரத்திற்கும் வேறு எந்த தொடர்பும் இல்லை. முழுக்க முழுக்க புதிய ஒரு கதாப்பாத்திரமாகவே என் கதாப்பாத்திரம் இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் சந்தானம் மிக எளிமையாக பழகினார். எங்கள் இருவருக்கும் இடையில் ஆன்மீகம் பொதுவான ஈர்ப்பாக இருந்தது.
’மன்மத லீலை’ படத்தின் கதை இரண்டு வெவ்வேறு கால கட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளது. கடடந்த காலம் மற்றும் நிகழ்காலம், என அமைந்த கதையில் நிகழ்காலத்தில் நான் தோன்றுகிறேன். இரண்டு மூன்று டேக்குகளுக்குள் நடிகர்களிடமிருந்து சிறந்த நடிப்பை பெற்று பிரமிக்க வைக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.” என்றவர், தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் பல படங்களில் ஒப்பந்தமாகியிருப்பதால், இந்த ஆண்டு முழுவதும் அவருடைய அடுத்தடுத்த படங்களின் அறிவிப்புகளை எதிர்ப்பார்க்கலாம், என்றும் தெரிவித்தார்.
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...