‘மாநாடு’ வெற்றியின் மூலம் தனது பலத்தை வெளிக்காட்டிய சிம்பு, தற்போது ‘வெந்து தணிந்தது காடு’ மற்றும் ‘பத்துதல’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ள நிலையில், அடுத்ததாக ‘கொரோனா குமார்’ படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும், பல முன்னணி தயாரிப்பாளர்கள் சிம்புவை வைத்து படம் தயாரிக்க ஆர்வம் காட்டுவதோடு, பல முன்னணி இயக்குநர்களும் சிம்புவை வைத்து பட இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனம் ஒன்று சிம்புவை அனுகி, தங்கள் நிறுவனம் தயாரிப்பில் தொடர்ந்து மூன்று படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதோடு, ரூ.100 கோடி சம்பளம் தருவதாகவும், முன் பணமாக ரூ.50 கோடியை உடனடியாக கொடுக்க தயாராக இருப்பதாகவும் கூறியதாம்.
ஆனால், அந்த 100 கோடி ரூபாயை நிராகரித்த சிம்பு, நல்ல கதைகளில் நடிக்க வேண்டும், என்பது தான் என் நோக்கம், பணத்திற்காக படங்களை ஒப்புக்கொள்ள மாட்டேன், என்று கூறிவிட்டாராம். ஆனால், அந்த நிறுவனத்தின் சார்பில் சிம்புவிடம் பேரம் பேசுவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள, சிம்பு திட்டவட்டமாக முடியாது, என்று கூறிவிட்டாராம்.
சிம்புவின் இந்த செயலால் ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமே வியப்படைந்துள்ளது.
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...