கடந்த மூன்று மாதங்களாக தமிழக மக்களின் மூளைகளில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்த் தொலைக்காட்சி நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸாக்த்தான் இருக்கும். டிவி பார்க்காத பழக்கம் உடையவர்களையும் டிவி பார்க்க வைத்த இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் ஆரவ் என்பவர் வெற்றி பெற்று, பிக் பாஸ் சீசன் 1 என்ற பட்டத்தை வென்றுள்ளார்.
சினேகன், ஹாரிஸ், கணேஷ் வெங்கட்ராம், ஆரவ் என நான்கு பேர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினாலும், இவர்களில் சினேகன் அல்லது கணேஷ் வெங்கட்ராம் இருவரில் ஒருவர் தான் வெற்றி பெறுவார்கள், என்று மக்களும் பிற ஊடகங்களும் கணித்ததால் என்னவோ, விஜய் டிவி சம்மந்தமே இல்லாத ஆரவுக்கு பட்டத்தை கொடுத்து மக்கள் முகத்தில் கரியை பூசியுள்ளது.
கேலி கூத்தாக நடந்த இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் பட்டத்தை யாருக்கு கொடுத்தால் நமக்கென்ன. சரி இந்த ஆரவ் யார்? என்பதை சற்று விசாரிக்கையில், அடுத்தவன் மனைவி மீது காதல் கொண்டவர் தான் இந்த ஆரவ், என்ற பகீர் தகவல் நமக்கு கிடைத்தது.
ஆனால், இது நிஜத்தில் அல்ல, ஒரு திரைப்படத்தில். ஆம், விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்த ‘சைத்தான்’ படத்தில், வாத்தியார் வேடத்தில் நடித்த விஜய் ஆண்டனியின் இளம் மனைவியை காதலித்து, அவரிடம் இருந்து அபகரிக்கும் கதாபாத்திரத்தில் ஒருவர் நடித்திருந்தாரே அவர் தான் இந்த ஆரவ்.
நாகர்கோவில் தான் ஆரவுக்கு சொந்த ஊர். ஆனால், இவர்கள் குடும்பம் பல ஆண்டுகளாக திருச்சியில் தான் வசித்து வந்துள்ளது.
ஆரவ் பள்ளி படிப்பை எல்லாம் திருச்சியில் தான் முடித்துள்ளார், கல்லூரிக்காக சென்னை வந்த இவர், அப்படியே மாடலிங் துறைக்கு வந்துள்ளார். அங்கிருந்து சைத்தான் பட வாய்ப்பு கிடைக்க, அப்படியே பிக்பாஸ் பக்கமும் எட்டிப்பார்த்துள்ளார்.
தற்போது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவின் காதலை கைப்பற்றியதன் மூலம் மக்களிடம் பிரபலமாகியுள்ள ஆரவ், அந்த பிரபலத்தை வைத்து பல சினிமா படங்களின் வாய்ப்பை பெற்றுள்ளாராம்.
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...
அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷான் தாஸ் நாயகனாகவும், ஷ்ம்ருதி வெங்கட் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தருணம்’...
வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'...