‘வால்டர்’ படத்தை இயக்கிய அன்பு இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் படத்திற்கு ‘ரேக்ளா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் அம்பேத்குமார் தயாரிக்கும் இப்படத்தின் டைடில் லுக்கை நடிகர் ஆர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
வெளியான சில மணி நேரங்களில் இணையவாசிகளிடம் ‘ரேக்ளா’ பட தலைப்பு வீடியோ வைரலானதோடு ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பிரபுதேவாவின் 85 வது திரைப்படமாக உருவாகும் ‘ரேக்ளா’ படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று இறைவனைச் சொல்வார்கள்...